அடுத்து மக்கள் ஆதரவை திரட்டும் முயற்சியாக, பிரதமர் மோடியைப் போலவே "மேன் வெர்சஸ் வைல்ட்" நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சியான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி "மேன் வெர்சஸ் வைல்டு". அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பேர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்.
undefined
அசத்தியமான சூழ்நிலைகள் உயிர் பிழைப்பதற்கான யுக்திகளை கற்றும் கொடுக்கும் நிகழ்ச்சி "மேன் வெர்சஸ் வைல்டு". சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற உள்ள இந்த நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பேர் கிரில்ஸ் உடன் இரண்டு நாட்கள் ரஜினிகாந்த் தங்கியிருக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: "5 முறை தொழுகை செய்யாவிட்டாலும், என் மதத்தின் மீது பற்றுக்கொண்டவன் நான்"... ஷாரூக்கானின் உருக்கமான பேச்சு...!
உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பாரத பிரதமர் மோடி, பேர் கிரில்ஸ் உடன் பங்கேற்றார். அந்நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து, அதே நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து இதை எல்லாம் வாங்கிட்டு வாங்க... இல்ல வீட்டுக்கே வராதீங்க... ரன்வீர் சிங்கிற்கு தீபிகா போட்ட ஆர்டர்...!
பெரியார் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறி தனது ஆன்மீக அரசியலில் அதிரடி காட்டி வந்த ரஜினிகாந்த், அடுத்து மக்கள் ஆதரவை திரட்டும் முயற்சியாக, பிரதமர் மோடியைப் போலவே "மேன் வெர்சஸ் வைல்ட்" நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.