Rajinikanth Golden Visa : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வேட்டையன் திரைப்பட பணிகளை முடித்துள்ள நிலையில் விரைவில் கூலி திரைப்படப் பணிகளை துவங்க உள்ளார்.
அண்மையில் தனது "வேட்டையன்" பட பணிகளை முடித்துவிட்டு அமீரகம் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லு லு நிறுவனத்தின் தலைவர் யூசுப் அலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தனது சொந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் சென்று அமீரகத்தில் பல இடங்களை சுற்றிக்காட்டினார்.
அமீரகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நட்பு ரீதியாக உரையாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமீரக அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகவும் உயரிய கௌரவங்களில் ஒன்றான கோல்டன் விசாவை வழங்கி தற்பொழுது சிறப்பித்துள்ளது.
undefined
மேலும் அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோவும் தற்பொழுது வைரலாகி வருகிறது. சரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த கோல்டன் விசா மூலம் அவருக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து பின்வருமாறு இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக இந்த கோல்டன் விசாக்களின் வேலிடிட்டி சுமார் பத்து ஆண்டுகளுக்கு கொடுக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் அதை மீண்டும் புதுப்பித்தும் கொள்ளலாம்.
இதன் மூலம் துபாய்க்கு நீங்கள் சென்று வர தனியே எந்தவித விசாவும் எடுக்க தேவையில்லை. அங்குள்ள உயர்ரக மருத்துவ சிகிச்சைகளை பெறவும் இந்த கோல்டன் விசா வாய்ப்பளிக்கிறது.
ஸ்பான்சர் பெற்று நீங்கள் அமீரகம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுது இந்த கோல்டன் விசா உங்களுக்கு உதவும். மேலும் நீங்கள் அமீரகத்தில் வசிப்பதற்கு இந்த கோல்டன் விசா உங்களுக்கு துணை புரியும்.
மேலும் கோல்டன் விசா மூலம் உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் துபாயில் வசிக்க உங்களால் ஸ்பான்சர் செய்ய முடியும். கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு Esaad Privilege Card வழங்கப்படும். இது அமீரகம் மட்டுமல்லாமல் சுமார் 92 நாடுகளில் உங்களுக்கு தேவையான சில பொருட்களை தள்ளுபடி விலையில் பெறுவதற்கு உதவுகிறது.