
தமிழ் சினிமாவில் 1970களின் நடுப்பகுதியில் இருந்து நடித்துவரும் மிக மூத்த நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் துவங்கிய அவருடைய திரைப் பயணம் தற்பொழுது ஜெயிலர் திரைப்படம் வரை பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது என்றால் சற்றும் அது மிகையல்ல. இந்திய சினிமாவில் ஸ்டைல் ஐகானாக, கோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராக கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கலைத்துறையில் பயணித்து வருகிறார்.
இறுதியாக பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான "ஜெயிலர்" திரைப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் தனது பணிகளை ரஜினி நடித்து முடித்துள்ளார்.
அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள "கூலி" என்கின்ற திரைப்படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாக பணிகளையும் தொடர உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஓய்வெடுக்க அமீரகதிற்கு சென்றுள்ளார்.
அங்கு உலக புகழ்பெற்ற லுலு நிறுவனத்தின் தலைவர் யூசுப் அவர்கள், தனது rolls-royce காரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அழைத்துக் கொண்டு அவருக்கு அமீரகத்தை சுற்றிக் காட்டிய வீடியோக்கள் அண்மையில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் அமீரகம் ஒரு புதிய கௌரவத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
அதன்படி அமீரகம் தங்களது கோல்டன் விசாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தற்பொழுது வழங்கி உள்ளது. இதுகுறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், லு லு நிறுவன தலைவர் யூசுப் அவர்களுக்கும், எனக்கு இந்த கோல்டன் விசா கிடைக்க உதவிய அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.