
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "பேட்ட" திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள படம் "தர்பார்". அந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் சூப்பர் காப் ஆக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதால், அவரது அதிரடி ஆக்ஷன் பிளாக்கை பார்க்க ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியும் நடித்துள்ளனர். யோகிபாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், பேபி மானஸ்வி உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான "தர்பார்" படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர், பாடல் என அனைத்தும் சோசியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக "தர்பார்" படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டர் சோசியல் மீடியாவில் செம்ம கெத்து காட்டி வருகிறது. அந்த போஸ்டரில் சின்ன பிள்ளைப் போல, செம்ம ஸ்டைலாக ரஜினி துள்ளி குதித்து வரும் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.