ரஜினி எழுதி வெச்ச 270 கோடி உயில்: அரசியலுக்கு அவசரமா? இல்ல குடும்பத்துக்குள்ளே கும்மாங்குத்தா?

By Vishnu PriyaFirst Published Dec 25, 2019, 11:11 AM IST
Highlights

மூன்று பேருக்கும் சேர்த்து மொத்தமாக அவர் போட்டிருக்கும் எழுபத்தைந்து கோடியானது, குறிப்பிட்ட சில வருடங்கள் கழித்து மூவரின் கைகளில் கிடைக்கும்படி செய்துள்ளாராம். அதாவது தலைக்கு தொண்ணூறு கோடி கிடைக்குமாம், ஆக மொத்தம் இருநூற்று எழுபது கோடி ரூபாய். 
 

உலகத்துக்கு வேண்டுமென்றால் ரஜினிகாந்த் எனும் நடிகர், சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரின் மகன்களுக்கும் அவர் ‘தாத்தா’  தானே!? இந்த வயதில் அந்த தாத்தா அவர்களுக்கு செய்திருக்கும் ஒரு காரியம்தான் அக்குடும்பத்தின் நெருங்கிய நபர்கள் வழியே வெளியே கசிந்திருக்கிறது. இது, ரஜினியை நெருங்கிய நண்பர்களையும், அவரது அரசியலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களையும் பல கோணங்களில் யோசிக்க வைத்திருக்கிறது. அப்படி என்ன செய்திருக்கிறார் ரஜினி தாத்தா?....

ரஜினிக்கு இரு மகள்கள்: ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா. இதில் மூத்தவரான ஐஸ்வர்யா,  நடிகர் தனுஷை மணந்து அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு  மகன்கள். இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு முதல் திருமண பந்தத்தில் பிறந்த மகன் தான் வேத். ஆக ரஜினிக்கு கடந்த சில வருடங்களாகவே இந்த மூன்று பேரனிகளும்தான் உலகமே. ஆயிரம் பஞ்சாயத்துகள், பிரச்னைகள் இருந்தாலும் கூட எல்லாவற்றையும் தாண்டி அவர் ரிலாக்ஸ் செய்து கொள்வது இந்த மூன்று சிறுவர்களுக்கும் இடையில்தான். இந்த நிலையில் தன் மூன்று பேரன்கள் பெயரிலும் சமீபத்தில் தலா இருபத்து ஐந்து கோடி ரூபாய் பணத்தை ரஜினி டெபாசீட் செய்திருக்கிறார்! என்று ஒரு ஸ்பெஷல் தகவல் வெளியாகி உள்ளது. மூன்று பேருக்கும் சேர்த்து மொத்தமாக அவர் போட்டிருக்கும் எழுபத்தைந்து கோடியானது, குறிப்பிட்ட சில வருடங்கள் கழித்து மூவரின் கைகளில் கிடைக்கும்படி செய்துள்ளாராம். அதாவது தலைக்கு தொண்ணூறு கோடி கிடைக்குமாம், ஆக மொத்தம் இருநூற்று எழுபது கோடி ரூபாய். 

ரஜினி குடும்பத்தைப் பொறுத்தவரையில் இந்த காலத்திலேயே அந்த 270 கோடி என்பது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியானால் இன்னும் சில வருடங்கள் கழித்து, அதுவெல்லாம் ரஜினி ஸ்டைலில் சொல்வதென்றால் ‘ஜூஜூபி மேட்டர்’தான். ஆனாலும் ரஜினி தன் பேரன்களுக்காக அதை செய்திருக்கிறார்! என்றால், ஒரு தாத்தாவாக தன் கடமையை அவர்களுக்கு நிறைவேற்றி இருக்கிறார் என்பதே! இதன் பொருள். இதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எந்த கேள்வியும் வரப்போவதில்லை. ஆனால் இப்போது இந்த தகவலை வைத்து எழுந்திருக்கும் கேள்வி  என்னவென்றால்?  ஏதோ உயில் எழுதி வைத்ததற்கு சமமாக ரஜினி இப்படி சுமார் இருநூற்று எழுபது கோடி ரூபாய் மதிப்பை திட்டமிட்டு, எழுபத்தைந்து கோடியை இன்வெஸ்ட் செய்துள்ளார் தன் பேரன்களுக்காக? என்பதே. இதை அடிப்படையாக வைத்து பேசும் சில நபர்கள் ’ரஜினிகாந்த் தான் இப்போது நடிக்க துவங்கியிருக்கும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தை முடித்துவிட்டு நிச்சயம் அரசியலுக்கு வர இருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருகையில் அவருக்காக இந்த நாட்டில் மட்டுமல்ல சர்வ தேசங்களில் இருந்தும் பல பெரும் மில்லியனர்கள் நிதி உதவி செய்வார்கள்தான். ஆனாலும் அதை ரஜினி எந்தளவுக்கு என்கரேஜ் செய்வார், நார்மல் அரசியல்வாதி போல் அடுத்தவர்களிடம் பணம் வாங்கி பாலிடிக்ஸ் செய்வார்! என்று தெரியவில்லை. 

எனவே தான் சம்பாதித்து வைத்திருக்கும் பெரும் தொகையை இறக்கலாம், அதை இழக்கவும் செய்யலாம். எனவேதான் தன் குடும்பக் கடமையை முடிக்க வேண்டும் எனும் நோக்கில் அவர் இப்படி பேரன்களுக்கு இத்தொகையை முதலீடு செய்திருக்கிறார்! மனைவி மற்றும் மகள்களுக்கு அவர் இதுவரையில் எவ்வளவோ செலவு செய்தும், முதலீடு செய்தும் கொடுத்துவிட்டார். எனவே தான் பேரன்களுக்காக இதை இப்போது செய்திருக்கிறார்!” என்று ஒரு டீம் சொல்கிறது, இன்னொரு டீமோ, ‘ரஜினியின் குடும்பத்தில் சில சலசலப்புகள். சமீபத்தில் அவர் தனது நட்சத்திர பிறந்த நாளை தன் வீட்டில் வைத்து, சொந்த பந்தங்களை அழைத்து நடத்தினார். அதன் பின் சொத்து தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுத்தார். அதில் சில சலசலப்புகள் உருவாகின. அதன் வெளிப்பாடே இந்த பிக்ஸட் டெபாசிட் முடிவு.” என்கிறார்கள். பேரன்கள் வரைக்கும் நூற்றுக்கணக்கான கோடிகளை டெபாசிட் பண்ணிய ரஜினி, அக்கோடிகளை அவர் சம்பாதிக்க காரணமான ரசிகர்களுக்கு என்ன செய்யப்போகிறார்? என்று உசுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள் சிலர். இதெப்டியிருக்கு?

click me!