அருவி திரைப்படத்தை ஆஹா ! ஓஹோ ! என பாராட்டிய சூப்பர் ஸ்டார்….

 
Published : Dec 23, 2017, 03:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
அருவி திரைப்படத்தை ஆஹா ! ஓஹோ ! என பாராட்டிய சூப்பர் ஸ்டார்….

சுருக்கம்

super star rajinikanth congrats Aruvi team

அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்த திரைப்படத்தின்  தயாரிப்பாளர் S.R.பிரபுவையும் வாழ்த்தினார்.

அருவி திரைப்படம் அண்மையில் வெளிவந்து அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் அருவி திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபு மற்றும் நாயகி அதீதிபாலனை நேரில் அழைத்து சிறந்த படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார்.

அருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரபுவையும் வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் என்ன படங்களையெல்லாம் தயாரித்துள்ளார் என்பதை கேட்டுள்ளார்.

அவர் தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம் , தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை தயாரித்துள்ளேன் என்று பதிலளித்த போது. நீங்கள் தயாரித்த எல்லா படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லா படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் அருண்பிரபுவிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் போது :- அருவி ரொம்ப Brilliant ஆன படம் , ரொம்ப Excellent ஆன படம் , ரொம்ப அழுதேன் , நிறைய சிரிச்சேன். நான் தனியாக படத்தை பார்க்கும் போது  தியேட்டர்-ல உட்கார்ந்து பார்த்த ஒரு பீல் கிடைச்சுது. Tremendous work.  இந்த படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த படத்தை கொடுத்ததற்காக எங்களை போன்ற மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும் என்று இயக்குநரை பாராட்டினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த கதையை எங்க இருந்து ஆரம்பிச்சிங்க என்று கேட்டுள்ளார் ??

அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வார்த்தையான “ Rolling sir “ என்ற வார்த்தை மூன்று முறை படத்தில் வருவது போல் சத்தமாக கூறி மகிழ்ந்துள்ளார். 

அருவி திரைப்படத்தின் நாயகி அதீதியிடம் :- உங்க Performance super… எவ்வளவு weight loss பண்ணிங்க என்று கேட்டு பாராட்டியுள்ளார்.

இறுதியில் உங்களை போன்ற ஆட்கள் கண்டிப்பாக ரொம்ப நாள் சினிமாவில் இருக்கணும். படத்துக்கு பொங்கல் வரைக்கும் பப்ளிசிட்டி பண்ணுங்க என்று கூறி வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்