உங்க பணம் வேண்டாம் ... அஜித்தை அவமதித்து ‘கெத்து’ காட்டிய விஜயகாந்த்..!

 
Published : Dec 23, 2017, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
உங்க பணம் வேண்டாம் ... அஜித்தை அவமதித்து ‘கெத்து’ காட்டிய விஜயகாந்த்..!

சுருக்கம்

dont want money vijayakanth insult ajith

நடிகர் விஜயகாந்த், நல்ல மனிதர், நல்ல நடிகர் என்பதையும் கடந்து, நடிகர் சங்கத் தலைவர், நல்ல மனசுள்ள அரசியல்வாதி என்று பெயர் எடுத்தவர். இவருடைய வாழ்நாளில் இவர் சந்தித்த ஒரு சம்பவம்... கடந்த 2001ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக பதவி ஏற்ற போது நடிகர் சங்கத்துக்கு  ஏகப்பட்ட கடன் இருந்தது.

இந்தக் கடனை அடைக்க முடிவு செய்த விஜயகாந்த், கலைநிகழ்ச்சி நடத்தி அதில் வரும் பணத்தைக் கொண்டு கடனை அடைக்க முடிவு செய்தார். அதன்படி கலை நிகழ்ச்சி அமோகமாக சிங்கப்பூரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள ஏராளமான தமிழ் திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. 

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் மட்டும் பங்கேற்கவில்லை. அதற்கு மாறாக விஜயகாந்தை நேரில் சந்தித்து நம்முடைய கடனை அடைக்க ஏன்... மக்களிடம் காசு வசூலிக்க வேண்டும். நாமே அடைத்து விடலாம் எனக் கூறி கலைநிகழ்ச்சிக்கு முன்பே ரூ.10 லட்சத்திற்கான காசோலையைக் கொடுத்துள்ளார். 

இதனை வாங்க மறுத்த விஜயகாந்த்... நீங்கள் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததற்கு காரணத்தை மட்டும்  சொல்லுங்கள், நீங்கள் கொடுக்கும் பணம் வேண்டாம் என அஜித்தை அவமதிப்பது போல் கூறி விட்டு, நாங்கள் சொன்ன தேதியில் கலை நிகழ்ச்சி நடைபெறும் என்றும், நீங்கள் கொடுக்கும் பணத்தை நான் பெற்றால், அது கலைநிகழ்ச்சி நடத்தத் தயாராகிவரும் அனைத்து கலைஞர்களையும் அவமதிக்கும் செயலாகிவிடும்  என்றும் கூறினாராம். 

விஜயகாந்த் இப்படிச் செய்தது அப்போதைய சூழ்நிலையில் அஜித் ரசிகர்களால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், மற்ற கலைஞர்கள் விஜயகாந்த் செய்தது சரி என்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். குறித்த தேதியில் கலைநிகழ்ச்சி  நடத்தப்பட்டு நடிகர் சங்க கடனும் ஓரளவுக்கு அடைக்கப்பட்டது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்