ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியல்…  நடிகர் சல்மான்கான் முதலிடம்… கமல், ரஜினி இல்லை!!

 
Published : Dec 23, 2017, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியல்…  நடிகர் சல்மான்கான் முதலிடம்… கமல், ரஜினி இல்லை!!

சுருக்கம்

Forbs ...100 Indains list...salmankhanis first

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 100 இந்தியப் பிரபலங்களின் பட்டியலில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவரது ஆண்டு வருமானம் 2,683 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும், 100 இந்தியப் பிரலங்களின் பட்டியலை அவர்களின் வருமானம் மற்றும் புகழின் அடிப்படையில் வெளியிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, இந்த ஆண்டு, வருமானம் மற்றும் வயதின் அடிப்படையிலும், 2017-ம் ஆண்டு வெளியான படங்களின் அடிப்படையிலும் நிர்ணயித்துள்ளது.

இதனால் இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியலில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.. இந்த பிரபலங்கள் பட்டியலில் நடிகர்கள் சூர்யா, அஜித், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடம் பிடித்துள்ளார். 51 வயதான சல்மான்கான், 'டியூப்லைட்' படத்தின் மூலமும், விளம்பர வருவாய் மூலமும் இந்த ஆண்டு மட்டும் 2,683 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சல்மான்கானின் வருமானம் கடந்த ஆண்டை விட, 8 புள்ளி ஆறு ஏழு சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஷாருக்கானும், 3-வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியும் இடம்பெற்றுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அக்‍ஷய் குமார், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர். 

நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே முறையே 7 மற்றும் 11-வது இடங்களைப் பிடித்துள்ளனர். 12-வது இடத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், 25-வது இடத்தில் சூர்யா, 27-வது இடத்தில் அஜித் குமார் இடம்பெற்றுள்ளனர். நடிகர் விஜய்க்கு 31-வது இடமும், ஜெயம் ரவிக்கு 39-வது இடமும், விஜய் சேதுபதிக்கு 54-வது இடமும், தனுஷுக்கு 70-வது இடமும் கிடைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்