'தலைவர் 169 ' பட இயக்குனர் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த கசிந்த தகவல்!

Published : Jul 10, 2021, 12:24 PM IST
'தலைவர் 169  ' பட இயக்குனர் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த கசிந்த தகவல்!

சுருக்கம்

'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்த பின்னர், தற்போது அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை முடிந்து சென்னை உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்த பின்னர், தற்போது அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை முடிந்து சென்னை உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு ஏற்பட்ட தீடீர் பிரச்சனை..! மூளைக்கு அருகே செய்யப்படும் அறுவைசிகிச்சை!
 

இயக்குனர் சிவா இயக்கத்தில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த 'அண்ணாத்த' திரைப்படம் ஷூட்டிங் பணிகள் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக சற்று தாமதம் ஆனாலும், மே மாதம்... ஒட்டு மொத்த படத்தையும் நடித்து கொடுத்து விட்டு வந்தார். இதை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருந்துவர்கள் குழு ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து ,  ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு உடற்பரிசோதனைக்காக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக செல்லமுடியாத நிலையில், இந்த வருடம் மத்திய அரசின் அனுமதி பெற்று தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். உடல்பரிசோதனைகள் சிறப்பாக நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று அதிகாலை 3 :30 மணியளவில் சென்னை வந்தார். அவருக்கு ரசிகர்கள் உட்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிலையில்... இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாக துவங்கியுள்ளது.

மேலும் செய்திகள்: டைட் உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி ஒர்க் - அவுட்..! மிரள வைக்கும் பிக்பாஸ் ஷிவானி...!
 

இதுக்குறுய்த்து வெளியாகியுள்ள தகவலில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்... தலைவர் 169 ஆவது படத்தை நடிக்க உள்ளதாகவும். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் வெளியான போது, படத்தை பார்த்துவிட்டு... இயக்குனரை சூப்பர் ஸ்டார் போன் செய்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் தலைவரின் 169 ஆவது படம் குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்