ரஜினியின் அடுத்த படத் தயாரிப்பாளர் குறித்த ஒரு சூப்பர் தகவல்...

Published : Jul 08, 2019, 11:28 AM IST
ரஜினியின் அடுத்த படத் தயாரிப்பாளர் குறித்த ஒரு சூப்பர் தகவல்...

சுருக்கம்

‘நல்லாப் பாத்துக்கங்க அடுத்த ரஜினி படத்தயாரிப்பாளர் நானேதான்’என்று போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக ஊரெல்லாம் முழங்கிக்கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு. ஆனால் இந்தத் தகவல் ரஜினிக்குத் தெரியுமா என்பதுதான் தெரியவில்லை.  

‘நல்லாப் பாத்துக்கங்க அடுத்த ரஜினி படத்தயாரிப்பாளர் நானேதான்’என்று போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக ஊரெல்லாம் முழங்கிக்கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு. ஆனால் இந்தத் தகவல் ரஜினிக்குத் தெரியுமா என்பதுதான் தெரியவில்லை.

ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் இருத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து அடுத்த படத்துக்கு ரஜினி தயாராகிவிடுவார். ஆனாலும் இதுவரை ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூவமாக எந்தத் தகவலும் இல்லை.

இயக்குநர்கள் பட்டியலில்  கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் தற்போது நேர்கொண்டபார்வை இயக்கியிருக்கும் எச்.வினோத் ஆகியோர் ரஜினியின் பரிசீலனையில் இருக்கும் இயக்குநர்கள் என்று சொல்லப்படுகிறது.இவர்கள் சொல்லும் திரைக்கதையே ரஜினியின் அடுத்த இயக்குநர் யார்? என்பதை முடிவு செய்யும்.

இயக்குநர் யாராக இருந்தாலும் சரி, ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர்தான் என்று திரையுலகில் சொல்லப்படும் பெயர் கலைப்புலிதாணு.இவர் கபாலி திரைப்படத்தைத் தயாரித்தார், காலா திரைப்படத்தை வெளியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று ரஜினியின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.அதன் காரணமாகவே ரஜினி தன் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை கலைப்புலி தாணுவுக்குக் கொடுத்திருக்கிறார் என்று தாணுவே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படி தொடர்ந்து செய்திகள் பரப்புவதன் மூலம் மற்ற தயாரிப்பாளர்கள் ரஜினியை அணுகுவது குறையும் என்பது கலைப்புலியாரின் கணக்கு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!