ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா?...வீடு தேடிச்சென்று ரசிகர்கள் செய்த காரியம்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jun 19, 2020, 2:44 PM IST

இதையடுத்து தனிப்படை போலீசார் சிறுவனையும், அவர்களது பெற்றோரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. யாரோ ஒரு மர்ம நபர் ஆம்புலன்ஸ் சேவைக்கான 108 எண்ணுக்கு கால் செய்து ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழு, ரஜினியின் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

மொத்த வீட்டையும் சலித்தெடுத்த வெடிகுண்டு நிபுணர்கள் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த போன் கால் வெறும் புரளி என்பதை கன்ஃபார்ம் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேனாம்பேட்டை போலீசார் கொரோனா நேரத்தில் இப்படி வதந்தி பரப்பி விளையாடுவது யார்? என தீவிர தேடலில் இறங்கினர். 

 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத கொரோனா.... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி...!

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் சிறுவனையும், அவர்களது பெற்றோரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தனது தந்தையின் போனில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் பெற்றோரை எச்சரித்து அனுப்பிய போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து எழுதி வாங்கிக்கொண்டு சிறுவனை அனுப்பிவைத்தனர். 

 

இதையும் படிங்க: 

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அந்த பகுதியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிறுவனுக்கு உதவ முடிவெடுத்தனர். கொரோனா நேரத்தில் கஷ்டப்பட்டு வந்த அந்த குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கினர். ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பிய நபரை கண்டித்து நேற்று  அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொதி நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!