தவறான வழிகாட்டிய சுஷாந்த்... அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட 15 வயது சிறுவன், சிறுமி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 19, 2020, 02:05 PM IST
தவறான வழிகாட்டிய சுஷாந்த்... அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட 15 வயது   சிறுவன், சிறுமி...!

சுருக்கம்

"சிச்சோரே" என்ற படம் மூலம் தற்கொலைக்கு எதிரான கருத்தை தீவிரமாக வலியுறுத்தியிருந்த சுஷாந்த், தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாது, வரும் தலைமுறைக்கு தவறான உதாரணமாகவும் மாறியிருப்பது வேதனை அளிக்கிறது. 

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

இதனிடையே சுஷாந்த் சிங்கிற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் தொழில் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமே அவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை இளம் தலைமுறையினருக்கு தவறான உதாரணமாக மாறியுள்ளது. அந்தமான், நிக்கோபர் தீவில் உள்ள போர்ட் பிளேரில் வசித்து வந்த 15 வயது சிறுமி இரண்டு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரும் சுஷாந்த் போலவே கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை. 

 

இதையும் படிங்க:  சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத கொரோனா.... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி...!

இதுகுறித்து விசாரணை நடத்திய அந்தமான் டிஜிபி தீபேந்திர பதக், சிறுமி கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு சிறுமி கைப்பட எழுதிய டைரியில் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி நிறைய எழுதி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமி டைரியில் எழுதி வைத்திருந்ததை பார்க்கும் போது அவருக்கு சுஷாந்த் சிங்கை மிகவும் பிடிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. 

 

இதையும் படிங்க: “இதை செய்தாலே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்”... முதலமைச்சருக்கு இயக்குநர் சேரன் வைத்த அதிரடி கோரிக்கை...!

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவர் தன்னை மற்றவர்கள் பெண் என கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்ட அந்த சிறுவன், "இப்படி ஹீரோவே தற்கொலை செய்து கொள்ளும் போது, நானும் தற்கொலை செய்து கொள்ளலாம்" என தனது சகோதரியிடம் கூறியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. "சிச்சோரே" என்ற படம் மூலம் தற்கொலைக்கு எதிரான கருத்தை தீவிரமாக வலியுறுத்தியிருந்த சுஷாந்த், தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாது, வரும் தலைமுறைக்கு தவறான உதாரணமாகவும் மாறியிருப்பது வேதனை அளிக்கிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?