திரையுலகினருக்கு அடுத்த அதிர்ச்சி... மாரடைப்பால் பிரபல இயக்குநர் மரணம்... பலனளிக்காமல் போன தீவிர சிகிச்சை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 19, 2020, 11:11 AM ISTUpdated : Jun 19, 2020, 11:22 AM IST
திரையுலகினருக்கு அடுத்த அதிர்ச்சி... மாரடைப்பால் பிரபல இயக்குநர் மரணம்... பலனளிக்காமல் போன தீவிர சிகிச்சை...!

சுருக்கம்

அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி காலமானார்.

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் அந்த மலையாள திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுமட்டுமின்றி பிருத்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். மலையாள சினிமாவில் மற்றொரு சூப்பர் ஹிட்டான அனார்கலி படமும் இவர் இயக்கியது தான். 

 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத கொரோனா.... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி...!

ரிட்டயர்ட் ராணுவ வீரருக்கும், ரிட்டயர்டு ஆகப்போகும் இன்ஸ்பெக்டரும் இடையேயேன ஈகோவை ஏதார்த்தம் ப்ளஸ் சுவாரஸ்யத்துடன் விவரித்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இதில் சரத்குமார் - சசிகுமார், சசிகுமார்  - ஆர்யா என பலர் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. ஏன் சகோதரர்களான சூர்யா - கார்த்தி கூட நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் கிளம்பின. 

 

இதையும் படிங்க: “இதை செய்தாலே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்”... முதலமைச்சருக்கு இயக்குநர் சேரன் வைத்த அதிரடி கோரிக்கை...!

இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு  “அய்யப்பனும் கோஷியும்” படத்தின் இயக்குநர் சச்சி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 15ம் தேதி சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீடு திரும்பிய அன்றைய தினமே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் இயக்குநர் சச்சி தீவிர சிகிச்சை  பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வெண்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் சச்சியின் மூளையில் “ஹைபோக்சிக் பிரைன் டேமேஜ்” ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை கொடுத்து வருவதாக தெரிவித்தனர். ஏற்கனவே திரைத்துறையைச் சேர்ந்த சேது, சிரஞ்சீவி சார்ஜா, இர்பான்ஃகான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட் என அடுத்தடுத்து பிரபலங்களின் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதையும் படிங்க:  மூன்றாவது திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் வனிதா... அவருடைய மகளின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

அப்படியிருக்க மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் சச்சி மீண்டு வந்துவிடுவார் என ஒட்டுமொத்த திரையுலகமும் நினைத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் 48 வயதான இயக்குநர் சச்சி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது திடீர் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!