
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரியங்கா தற்போது மருத்துவராக தன்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார். முதல் நாளே தான் மருத்துவராகப் பணியாற்றிய புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனைவரும் வெற்றி பெறுவது இல்லை என்றாலும், இதில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறந்த அறிமுகம் கிடைக்கிறது. இதனால் இதில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலர் தற்போது பின்னணி பாடகர்களாக உள்ளனர். அந்த வகையில் தன்னுடைய இனிமையான குரலால் ரசிகர்களை மயக்கியவர் பிரியங்கா.
இவர் சூப்பர் சிங்கர் பட்டத்தை ஜெயிக்க வில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு உருவாகியுள்ளது. எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இவரிடம், பல பாடல்களை பாட கூறி ரசிகர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று இவரும் பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இவர் பாடிய மெலடி பாடல்களை தேடிப்பிடித்து பார்ப்பதற்காகவே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வாய்ப்பில் தன்னுடைய பாடல் திறமையை வெளிப்படுத்தி, இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையில் பிரியங்கா பாடிவிட்டார். இதை தாண்டி தற்போது மருத்துவராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
கடந்த ஓரிரு வருடத்திற்கு முன் ப்ரியங்கா பல் மருத்துவர் படிப்பை முடித்த நிலையில், தனியாக பல்மருத்துவமனை துவங்க ஆயத்தமாகி வந்தார். தற்போது தனக்காக ஒரு பல் மருத்துவமனை ஒன்றை துவங்கியுள்ளார் பிரியங்கா. பலருக்கு பல் சிகிச்சை அளிக்க துவங்கியுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் 'பல் மருத்துவ சேவையின் முதல் நாள்" என்று கூறி தான் மருத்துவம் பார்த்தவர்களின் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். இதை அடுத்து இவரது ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.