தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன?... கர்ணன் சிக்கலை முடித்து வைக்க மாரி செல்வராஜ் எடுத்த முடிவு!

Published : Mar 25, 2021, 12:02 PM IST
தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன?... கர்ணன் சிக்கலை முடித்து வைக்க மாரி செல்வராஜ் எடுத்த முடிவு!

சுருக்கம்

'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற பண்டாரத்தி புராணம் பாடல், குறிப்பிட்ட சமூகத்தினர் மனதை காயப்படுத்துவது போல் உள்ளதால், அந்த பாடலை நீக்க வேண்டும் என்றும், படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர் மாரி செல்வராஜ் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற பண்டாரத்தி புராணம் பாடல், குறிப்பிட்ட சமூகத்தினர் மனதை காயப்படுத்துவது போல் உள்ளதால், அந்த பாடலை நீக்க வேண்டும் என்றும், படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர் மாரி செல்வராஜ் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது...  அனைவருக்கும் அன்பின் வணக்கம்...  "கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும், நம்பிக்கையும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குனரான என் மீது நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும், மரியாதையும் தான் சினிமா என்னும் மாய கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுகவேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுக்கிறது.

அத்தகைய பொறுப்புணர்ச்சியும் கலைத் தன்மையோடுதான் நான் என் கடைசி படிமங்களை பெறும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கப்பட்டதுதான். அக்காவாக, அத்தையாக, ஆட்சியாக, பெரியம்மாவாக, நிலத்தோடும் என் ரத்தம் கலந்த காலத்தின் தேவதைகளான பண்டாரத்தின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்கள் ஆக சிதறவிட்டு காட்சிப்படுத்தியுள்ளேன். ஆனால் நம் சமூக அடுக்கு முறை , உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்து கொள்ள முடியாததாகவும், விலக முடியாததாகவும் இருக்கிறது.

அதன் அடிப்படையில் பண்டாரத்தின் புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும், வருத்தத்தையும், கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டராதியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்து விடப் போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக  மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கண்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான். கர்ணன் ஆடுவான். 

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் பிரியமும்... எப்போதும் காதலை பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம் என்று மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் மாற்றம் செய்யப்பட்டது போலவே இணையத்திலும் மாற்றம் செய்யப்பட்டு விட்டது யுடியூப் விதிகளின்படி இன்னும் ஒருசில தினங்களில் மாறிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
Siragadikka Aasai : கிரிஷை அடிவெளுத்த ரோகிணி... புது பெயரை கேட்டதும் மனோஜை கலாய்த்துத் தள்ளிய முத்து