
சமீபத்தில் 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2019ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் தமிழ் படங்களுக்காக விருது பெற்ற கலைஞர்கள் பட்டியல் வெளியானது.
தேசிய விருதை கைப்பற்றிய பிரபலங்கள் அனைவருக்கும், திரைத்துறையை சேர்த்தவர்கள், மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நேற்றைய தினம் இயக்குனர் இமயம் பாரதி ராஜா அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகள்: மாலத்தீவில் விதவிதமான கவர்ச்சி உடையில்... அம்மாவுடன் சேர்ந்து அட்ராசிட்டி பண்ணும் பிக்பாஸ் ஷிவானி!
இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடலுக்கு தேசிய விருது பெற்ற, இசையமைப்பாளர் டி.இமானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் விஜய் ஆகிய மூவருமே போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் டி.இமான், தளபதி விஜய்யின் 'தமிழன்' படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை திரையுலகில் துவங்கியவர்.
மேலும் செய்திகள்: மிதமான கவர்ச்சியில்... இடையை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி!
தல, அஜித்தின் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தான் தற்போது டி.இமான் தேசிய விருதை பெற்றுள்ளார். மேலும் , தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர். இப்படி தமிழ் திரையுலகின் டாப் பிரபலங்கள் மூவருடனும் பணியாற்றியதால், இவருக்கு மூன்று பேருமே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.