சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மூக்குத்தி முருகனின் வாழ்க்கையை திருப்பி போட்ட தளபதி விஜய்..! உண்மையை கேட்டு வியந்து போன ரசிகர்கள்!

Published : Nov 12, 2019, 11:47 AM IST
சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மூக்குத்தி முருகனின் வாழ்க்கையை திருப்பி போட்ட தளபதி விஜய்..! உண்மையை கேட்டு வியந்து போன ரசிகர்கள்!

சுருக்கம்

சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை பலருக்குள் ஒளிந்திருக்கும் இசை ஆர்வத்தையும், பாடும் திறமையையும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு வருடமும் வெளிக்கொண்டு வருகிறது விஜய் தொலைக்காட்சி.  

சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை பலருக்குள் ஒளிந்திருக்கும் இசை ஆர்வத்தையும், பாடும் திறமையையும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு வருடமும் வெளிக்கொண்டு வருகிறது விஜய் தொலைக்காட்சி.

ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரு பிரிவுகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு தினத்திற்கு முன் சூப்பர் சிங்கர், சீனியர் சீசன் 7 கிராண்ட் பினாலே நிகழ்ச்சி கோயம்புத்தூரில் உள்ள, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வென்ற முகேன் ராவ் கலந்துகொண்டு ரசிகர்களிடம் பேசினார். மேலும் அனந்த் வைத்தியநாதன், டிடி, போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களாக, அனுராதாஸ்ரீராம், பென்னி தியால், ஸ்வேதா மேனன், உன்னி கிருஷ்ணன்,  ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.  பல்வேறு சுற்றுகளை கடந்து இறுதி போட்டியில் ஷாம் நிஷாந்த், கௌதம், புண்யா, மற்றும் மூக்குத்தி முருகன் தேர்வாகினர்.

இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த நிகழ்ச்சியில்,  'எங்கே நிம்மதி' என்ற பாடலையும், வெத்தலையை போட்டேண்டி என்கிற பாடலையும் பாடி  ரசிகர்கள் மனதை கவர்ந்து, முதல் பரிசை தட்டி சென்றார் மூக்குத்தி முருகன். இவருக்கு விஜய் டிவியின் சார்பாக 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடும் வாய்ப்பையும் பெற்றார்.

இது ஒருபுறமிருக்க, மூக்குத்தி முருகன் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு பாடும் ஆர்வம் எப்படி வந்தது என்பதை கூறியுள்ளார். அதில், தனக்கு பாடுவதற்கு ஆர்வம் வர முக்கிய காரணம் தளபதி விஜய் தான் என்று அவர் கூறியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மூக்குத்தி முருகன் முதல் முதலில் பெண் குரலில் பாடியது என்றால் அது தளபதி விஜய் நடித்த, துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற இன்னிசை பாடிவரும் பாடலை தானாம்.  இந்தப் பாடல் அவர் பாடியதைக் கேட்டு விஜய் ரசிகர்கள் மற்றும் பலரும் இவரை  பாராட்டியதால் தொடர்ந்து நிறைய பாடல்களை பாடவேண்டும் என்கிற எண்ணம் தனக்கு வந்ததாக மூக்குத்தி முருகன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். விஜய் ரசிகர்கள் கொடுத்த ஊக்கம் தான் தொடர்ந்து தன்னை பாட வைத்ததாகவும். விஜய்யால் தான் தன்னுடைய வாழ்க்கை மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார் முருகன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?