ஆரம்பமே அதிரடி...! தூள் கிளப்பும் சூர்யா...! "சூரரைப் போற்று" ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைச்ச செம்ம ரெஸ்பான்ஸ்...!

Published : Nov 12, 2019, 11:37 AM IST
ஆரம்பமே அதிரடி...! தூள் கிளப்பும் சூர்யா...! "சூரரைப் போற்று" ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைச்ச செம்ம ரெஸ்பான்ஸ்...!

சுருக்கம்

இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை 1 மில்லியன் பேர் ட்வீட் செய்துள்ளனர்.  இதற்கு நன்றி தெரிவித்து 2டி நிறுவனம் சார்பில் டுவிட்டர் பதிவிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பேவரட் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா 'இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் 2D எண்டர்டைன்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

இதையும் படிங்க: பட ரிலீஸுக்கு முன்னாடியே இப்படியா?... முதல் படத்திலேயே சீயான் மகனுக்கு பெருகும் ஆதரவு... யு-டியூப்பில் கெத்து காட்டும் "ஆதித்யா வர்மா"...!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் பெயர் மாறன் என வைக்கப்பட்டுள்ளது. சூர்யா தனது இரு கைகளையும் விரித்து வானத்தில் பறப்பது போன்று போஸ்டர் வெளியானது. சிம்பிளாக இருந்தாலும் போஸ்டர் செம மாஸ் காட்டியுள்ளதாக சூர்யா ரசிகர்கள் கொண்டாடினர். 

சூர்யாவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக அமையும் என சூரரைப் போற்று படம் எதிர்பார்க்கப்படுகிறது.  திரைப்பிரபலங்கள் பலரும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து வெகுவாக புகழ்ந்தனர். இந்த சமயத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சத்தமே இல்லாமல் சாதனை படைத்து வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை 1 மில்லியன் பேர் ட்வீட் செய்துள்ளனர்.  இதற்கு நன்றி தெரிவித்து 2டி நிறுவனம் சார்பில் டுவிட்டர் பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிடும் படி ரசிகர்கள் சூர்யாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?