தள்ளி விட்ட நபரை செருப்பால் தாக்கி ரிவென்ஜ் எடுத்த சன்னி லியோன்.. வைரல் வீடியோ

Kanmani P   | Asianet News
Published : Jun 08, 2022, 07:57 PM IST
தள்ளி விட்ட நபரை செருப்பால் தாக்கி ரிவென்ஜ் எடுத்த சன்னி லியோன்.. வைரல் வீடியோ

சுருக்கம்

நீச்சல் குளத்தின் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை, ஒருவர்  தீடீரென தள்ளி விடுகிறார். இதனால் கடுப்பான சன்னி லியோன் செருப்பை கொண்டு தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிப்பு உலகில் நுழைவதற்கு முன்பு ஆபாச நட்சத்திரமாக இருந்தார். இருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் அந்த துறையை விட்டு வெளியேறினார். இருப்பினும், ஒரு நபரின் கடந்த காலம் அவரது எதிர்காலத்தை ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது. சன்னி லியோனும் கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார். இதற்குக் காரணம் அவர்களின் குழந்தைகள். இது குறித்து சமீபத்தில் சன்னி லியோன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

சன்னி லியோன் தனது பழைய தொழிலைப் பற்றி அறிந்தால், தனது குழந்தைகள் தன்னைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்று பயப்படுகிறார். குழந்தைகள் தங்கள் கடந்த காலத்தை விரும்ப மாட்டார்கள் என்று சன்னி கருதுகிறார். சமீபத்தில் ஒரு உரையாடலின், 'என்னைப் பற்றி என் குழந்தைகள் வளர்ந்தவுடன் விரும்பாத பல விஷயங்கள் உள்ளன.என கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இவருக்கு நிஷா என்ற மகளும்  இரண்டு இரட்டை மகன்களும் உள்ளனர். சன்னி அடிக்கடி தனது குழந்தைகளுடன் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வார். இவர் தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார். சன்னி லியோன் நடிப்பில் விரைவில் 'ஓ மை கோஸ்ட்' படம் வெளியாகவுள்ளது. அதோடு வீரமா தேவி, ஷ்ரோ ஆகிய இரண்டு திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்  நீச்சல் குளத்தின் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை, அவருடைய நண்பர் தீடீரென தள்ளி விடுகிறார். இதனால், கடுப்பான சன்னி லியோன் தனது செருப்பை தூக்கி எரிந்து அவரை அடிக்கிறார். இந்த வீடியோவுடன் பழிவாங்கி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.  தற்போது இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!