Kangana Ranaut : சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படும் கங்கனா ரனாவத்.... ஏன் தெரியுமா?

Published : Jun 08, 2022, 03:24 PM ISTUpdated : Jun 08, 2022, 03:25 PM IST
Kangana Ranaut : சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படும் கங்கனா ரனாவத்.... ஏன் தெரியுமா?

சுருக்கம்

Kangana Ranaut : டுவிட்டரில் பயனர் ஒருவர் கத்தார் ஏர்வேஸை விமர்சித்து, அதனை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி வெளியிட்ட அந்த ஸ்பூஃப் வீடியோவை நடிகை கங்கனா உண்மை என நம்பி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தக்கட் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் மாபெரும் இழப்பை சந்தித்து பிளாப் ஆனது. இதையடுத்து தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் கங்கனா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

சில சமயங்களில் அதில் அவர் தெரிவிக்கும் சர்ச்சைகளை ஏற்படுத்தும், அந்த வகையில் தற்போது அவர் ஸ்பூஃப் வீடியோவை உண்மை என நினைத்து, கத்தார் ஏர்வேஸ் தலைவரை கடுமையாக சாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்.

டுவிட்டரில் பயனர் ஒருவர் கத்தார் ஏர்வேஸை விமர்சித்து, அதனை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி வெளியிட்ட அந்த ஸ்பூஃப் வீடியோவை உண்மை என நம்பிய நடிகை கங்கனா கத்தார் ஏர்வேஸ் தலைவர் அக்பர் அல் பேக்கரை முட்டாள் என திட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பின்னர் அது கிண்டலுக்காக பதிவிடப்பட்ட வீடியோ என தெரிந்ததும் கத்தார் ஏர்வேஸ் தலைவர் அக்பர் அல் பேக்கரை விமர்சித்து போட்ட பதிவுகளை இன்ஸ்டாகிராமில் இருந்து நடிகை கங்கனா நீக்கிவிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து நடிகை கங்கனாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ரியல் ‘திரை தீப்பிடிக்கும்’ தருணம்! Rolex சூர்யா என்ட்ரியின் போது கொளுந்துவிட்டு எரிந்த திரை- வைரலாகும் வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?