அனைவரும் ஆர்ப்பரித்து கொண்டாடிய Rolex கேரக்டரை ப்ளூ சட்டை இப்படி சொல்லிட்டாரே... கோபத்தில் சூர்யா ரசிகர்கள்

By Asianet Tamil cinema  |  First Published Jun 8, 2022, 3:56 PM IST

Blue Sattai Maaran : சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. அப்படிப்பட்ட கேரக்டரை பிரபல விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.


கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படம் வெளியான ஐந்து நாட்களிலேயே ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அதன் நடிகர்கள் தான். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என திறமை வாய்ந்த நடிகர்கள் கூட்டணி ஒருபுறம் இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சியில் கடைசி 3 நிமிடம் மட்டுமே வரும் நடிகர் சூர்யாவின் ரோலெக்ஸ் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

Latest Videos

அந்த காட்சியில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய சூர்யாவை டுவிட்டரில் பாராட்டதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்த அளவுக்கு அவரின் கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. அப்படிப்பட்ட கேரக்டரை பிரபல விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவ பதிவிட்டிருந்த மீமில் ‘விக்ரம்ல கேமியோவுக்கே இந்த அளவு கொண்டாடுறோம்னா உங்க படம் மட்டும் வந்திருந்தா... என ரசிகர்கள் கேட்கும்படியும், அதற்கு அல்ரெடி போன மாசம் வந்துச்சு டா என எதற்கும் துணிந்தவன் படத்தை சூர்யா சொல்வது போல் விமர்சித்து உள்ளார். இதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் மாறனை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ரியல் ‘திரை தீப்பிடிக்கும்’ தருணம்! Rolex சூர்யா என்ட்ரியின் போது கொளுந்துவிட்டு எரிந்த திரை- வைரலாகும் வீடியோ

click me!