சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்துள்ள மதகஜராஜா பொங்கல் விருந்தாக இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
காமெடி கலந்த கமர்ஷியல் படங்கள் இயக்குவதில் கில்லாடியான சுந்தர் சி, கடந்த 2013-ம் ஆண்டு விஷாலை வைத்து இயக்கிய படம் தான் மதகஜராஜா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் சந்தானம், மனோபாலா, மயில்சாமி, மணிவண்ணன் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது.
மதகஜராஜா திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும் நிதிப்பிரச்சனையால் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. சுமார் 12 ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படம் தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. 2025-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக மதகஜராஜா திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றிய விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரிலீஸ் படங்களின் கதைக்களம் ஒரு பார்வை!
மதகஜராஜா முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம். இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த சுந்தர் சி-க்கு நன்றி. விஷால் மற்றும் சந்தானம் காம்போவின் காமெடி அல்டிமேட்டாக உள்ளது. குறிப்பாக சந்தானம் - மனோபாலா வரும் காமெடி காட்சிகள் முரட்டு Fun ஆக உள்ளது. மொத்தத்தில் 100 சதவீதம் Fun கியாரண்டி என பதிவிட்டுள்ளார்.
It's completely Fun Filled Entertaining film.. Thank you sir give this amazing film... & combo ultimate fun & laughter.. 😂 & combo morattu Fun 😂😂😂😂😂
Over all - 💯 fun guarantee..😂 ❤️
புரட்சி பண்றேன், சாதி படம் எடுக்குறேன், கஞ்சா, போதை, ரத்தம்னு நம்மள போட்டு கொன்றது போதும். ரொம்ப நாளைக்கு அப்புறம் மிஸ் பண்ணது எல்லாம் கெடச்ச மாதிரியான ஒரு பீல். கட்டாயமாக போய் குடும்பத்தோட படத்த பாருங்க. மதகஜராஜா பொங்கல் வின்னர் என குறிப்பிட்டுள்ளார்.
[4/5]
புரட்சி பண்றேன், சாதி படம் எடுக்குறேன், கஞ்சா, போதை, ரத்தம்னு நம்மள போட்டு கொன்றது போதும்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் மிஸ் பண்ணது எல்லாம் கெடச்ச மாதிரியான ஒரு பீல்
கட்டாயமாக போய் குடும்பத்தோட படத்த பாருங்க.👌🔥💥
Pongal Winner 🏆
மதகஜராஜா பொங்கலுக்கு சரியான பேமிலி எண்டர்டெயினர் படமாக உள்ளது. ஒரு சீன் கூட 12 வருடம் ஆனதுபோல் தெரியவில்லை. சந்தானத்தின் கவுண்டர்கள், விஜய் ஆண்டனியின் பாடல் மற்றும் பின்னணி இசை, விஷாலின் பஞ்ச் டயலாக்குகள் மற்றும் மாஸ் சீன்ஸ், ஹீரோயின்களின் கிளாமர் என அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இது பக்கா சுந்தர் சி படம். பொங்கல் வின்னர் என பதிவிட்டுள்ளார்.
a perfect pongal family entertainer 🤩 not even one scene felt like it was a 12 years old film. Santanam counters, Vijay Antony songs and bgm, Vishal pinch dialogues and mass elevations,Heroines glamour everything is worked a pakka film 🫶 pic.twitter.com/P109X9e7GZ
— Ram Ganesh Manivelu (@krathaganhere)விண்டேஜ் சந்தானம் தனி ஒருவனாக மதகஜராஜா படத்தை காப்பாற்றி இருக்கிறார். இந்த பொங்கலுக்கு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மதகஜராஜா புது சாதனை படைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Vintage Santhanam single handedly saves the consistently funny .. we might be looking at a new record in TN BO this pongal ....
😇
mindless fun !!
மதகஜராஜா பொங்கல் வின்னர். பிரைம்ல இருந்த விஜய் ஆண்டனி - சந்தானம் - சுந்தர் சி காம்போ இப்படத்தை தூக்கி நிறுத்தி உள்ளது. மனோபாலா வரும் காட்சிகள் சுந்தர் சி ஏன் காமெடியில் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
- PONGAL WINNER!!!
Prime la irundha Vijay Antony - Santhanam - Sundar C trio makes this a good watch overall, despite the shortcomings and dated stuffs in the film..
The Manobala portion once again proves why Sundar C is the Undisputed King in Sequence Comedy! 🔥 pic.twitter.com/q6fMAv2GCV
இதையும் படியுங்கள்... பொங்கல் விருந்தாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள் என்னென்ன?