
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பேமஸ் ஆனவர் பாலா. அவர் இயக்கத்தில் கடந்த 6 ஆண்டுகளாக எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது வணங்கான் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்படத்தில் முதலில் சூர்யா தான் நாயகனாக நடித்திருந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதை அடுத்து அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து முடித்துள்ளார் பாலா.
வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வணங்கான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... மறைக்கப்படும் ரகசியம்? ஒரே வரியில் 'வணங்கான்' பட கதையை ரிவீல் செய்த இயக்குனர் பாலா!
வணங்கான், முற்றிலும் பழைய மற்றும் கணிக்கக்கூடிய கதையாக உள்ளது. திரைக்கதை மிகவும் போரிங் ஆக இருக்கிறது. பொறுமையை சோதிக்கிறது. சூர்யா கிரேட் எஸ்கேப். படம் மிகவும் ஒர்ஸ்ட். நேரம் தான் வீண் என ஆதங்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
வணங்கான் ஒட்டுமொத்த படமும் நந்தா படத்தின் ஒரு சீனுக்கு சமம். அருண் விஜய்யின் கதாபாத்திரம் பிதாமகன் விக்ரம் கேரக்டரை நினைவுபடுத்துகிறது. ஆனால் அவரின் நடிப்பு அருமை. நாயகி ரோஷினியும் நன்றாக நடித்துள்ளார் ஆனால் பெரியளவில் ஸ்கோப் இல்லை. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை வேற லெவல். முதல் பாதியில் கதையே இல்லை. இரண்டாம் பாதி ஆவரேஜ். மிஷ்கின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது. அதிகப்படியான சண்டைக்காட்சிகள் உள்ளன. திரைக்கதை சுமார் என குறிப்பிட்டுள்ளார்.
வணங்கான் படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு வேறலெவலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், இது பொங்கல் சம்பவம் எனவும் முயற்சி திருவினையாக்கும் என்றும் பதிவிட்டிருக்கிறார்.
மற்றொரு நெட்டிசன் வணங்கான் படம் பார்த்த பின்னர் போட்டுள்ள பதிவில், நல்ல வேளை கடவுளே சூர்யா வணங்கான் படத்தில் நடிக்கவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரிலீஸ் படங்களின் கதைக்களம் ஒரு பார்வை!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.