சிகரெட்... லிப் கிஸ் என மிரள வைத்த சுனைனா! வெளியானது ‘ரெஜினா’ பட டீசர்!

Published : May 30, 2023, 10:41 PM IST
சிகரெட்... லிப் கிஸ் என மிரள வைத்த சுனைனா! வெளியானது ‘ரெஜினா’ பட டீசர்!

சுருக்கம்

நடிகை சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள ரெஜினா படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.

யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே "SN Musicals" மூலம் பல ஆல்பம் பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   தற்போது 'ரெஜினா' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரோடக்ஷம் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.

Ajithkumar: ஆரம்பமாகும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. கேரளா ட்ரிப்பை முடித்து கொண்டு சென்னை திரும்பும் அஜித்!

மேலும் இன்று வரும் 'ரெஜினா' படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் கலந்து கொண்டார். மேலும் கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டனர்.

அப்போ எனக்கு 15 வயசு.! அப்போ தெரியல... இப்போ புரிஞ்சிடுச்சு... திருப்பதியில் வனிதா விஜயகுமார் பேட்டி!

இதுவரை அமைதியான கதாபாத்திரங்களையே நடித்துள்ள சுனைனா, இந்த படத்தில்... சிகரெட், லிப் கிஸ் காட்சி என எல்லை மீறி நடித்துள்ள காட்சிகள் வெளியாகி ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தற்போது வெளியாகியுள்ள 'ரெஜினா' டீசர் இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!