சொன்னபடியே கோப்பையை தட்டித்தூக்கி கெத்து காட்டிய தோனி... அன்புடன் வாழ்த்திய குஷ்பு

By Ganesh A  |  First Published May 30, 2023, 2:11 PM IST

5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு நடிகை குஷ்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. இரண்டு மாதங்கள் களைகட்டிய ஐபிஎல் திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில், கடந்தாண்டு சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

கடந்த மே 28-ந் தேதி இந்த இறுதிப்போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் மழை பெய்து ஆட்டம் நடக்காததால், ரிசர்வ் டே முறையில் நேற்று அப்போட்டி நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி சென்னை வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து. 215 ரன்கள் என்கிற கடின இலக்கை நிர்ணயம் செய்து இருந்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... எப்புட்ரா... அட்டர் பிளாப் ஆன சமந்தாவின் சாகுந்தலம் படத்துக்கு கேன்ஸ் பட விழாவில் கிடைத்த மிக உயரிய விருது

இதையடுத்து சென்னை அணி களமிறங்கியபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கும் 171 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த கடின இலக்கை அதிரடியாக விரட்டிய சென்னை அணி, கடைசி பந்தில் பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது. சாம்பியன் ஆன சென்னை அணிக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், சென்னை அணிக்கும், கேப்டன் தோனிக்கும் நடிகை குஷ்பு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தோனி தன் வீட்டுக்கு வந்து தன்னுடனும், தன்னுடைய மாமியார் உடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு கோப்பையை வென்றதற்கு நன்றி. நிறைய நிறைய அன்புடன் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு இருந்தார். குஷ்புவின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

From our home to you and team!!
Load an loads of love and more love!
Thanks for bringing the cup home. 💛💛💛💛💛 pic.twitter.com/3H6pxiANuR

— KhushbuSundar (@khushsundar)

இதையும் படியுங்கள்... 1 கிளாஸ் பால் குடித்தே 26 கிலோ உடல் எடையை குறைத்த நடிகர் ரன்தீப் ஹூடா - எப்படினு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

click me!