நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' பட கெட்டப்பில், விமான நிலையம் வந்த நிலையில், ஒரு நிமிடம் பாபா ராம் தேவ் தான் வந்து விட்டாரா என பலர் குழம்பி விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, அடுத்ததாக தான் நடித்து வரும், அதிரடி திரில்லர் படமான 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ், திங்கள்கிழமை மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கும் அதே கெட்டப்பில் வந்தார். நீண்ட தலைமுடி, மற்றும் தாடி, மீசையுடன் இவரை பார்த்த சிலர்... பாபா ராம் தேவ் தான் வந்துவிட்டாரா? என நினைத்து விட்டனர் என கூறப்படுகிறது.
மேலும் தனுஷ், மும்பை விமான நிலையம் வந்த போது, எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் மிகவும் ஸ்டைலிஷாக,கூலிங் கிளாஸ் மற்றும் மெரூன் கலர் லாங் ஸ்லீவ் வைத்த டீ- ஷார்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் ஒரு பீரியாடிக் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து, விரைவில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.