எத்தனை கிரிமினல் கூடத்தான் வாழறது! ஜீவனந்தத்தை தீர்த்து கட்ட ஆளை அனுப்பிட்டு அலப்பறை பண்ணும் குணசேகரன்!

Published : Aug 18, 2023, 03:19 PM ISTUpdated : Aug 18, 2023, 03:25 PM IST
எத்தனை கிரிமினல் கூடத்தான் வாழறது! ஜீவனந்தத்தை தீர்த்து கட்ட ஆளை அனுப்பிட்டு அலப்பறை பண்ணும் குணசேகரன்!

சுருக்கம்

எதிர்நீச்சல் சீரியல், தற்போது விறுவிறுப்பான கதைக்களத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்... அப்பத்தா கண் முழித்தவுடன்  ஓவராக குணசேகரன் அலப்பறை பண்ணும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

சன் டிவி தொலைக்காட்சியில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்புக்கு மத்தியில், 'எதிர்நீச்சல்' சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது . ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில், வீட்டில் உள்ள பெண்களை உருட்டி... மிரட்டி கொண்டு இருந்த குணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் விதத்தில், அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை ஜீவானந்தம் ஒரேயடியாக ஆட்டையை போட்டார்.

ஜீவானந்தம் சென்னையில் இருக்கும் போது அவரிடம் மோத முடியாது என்பதை தெரிந்து கொண்ட குணசேகரன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வளவன் உதவியுடன் தன்னுடைய தம்பி கதிரை அனுப்பி ஜீவானந்தம் அவரின் மனைவி மற்றும் மகளை பார்க்க வரும் போது கொலை செய்ய சொல்லி அனுப்புகிறார். ஒருபக்கம் ஜனனி ஜீவனந்தத்தை சந்தித்து பேச அவரின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் குணசேகரனின் ஆட்கள் ஜீவனந்தத்தை கொலை செய்ய வருகிறார்கள். 

ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி! கப்பு சிப்புனு கட் செய்த இசைப்புயல்!

இவர்கள் ஜீவனந்தத்தை சந்தித்தால் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. இந்நிலையில் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், அப்பா வருவார் என காத்திருக்கும் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக என்ட்ரி கொடுக்கிறார் ஜீவானந்தம். இதை தொடர்ந்து ஜீவானந்தத்தின் மனைவி, அவரின் கைகளை பிடித்து கொண்டு, "எனக்கு வெண்பாவை நினைக்கும் போது தான் பயமாக இருக்கு.... அவள் உங்கள ரொம்ப மிஸ் பண்றா என கூறுகிறார்".இதை கேட்டு ஜீவனந்தத்தின் முகம் சோகமாகிறது.

சாச்சிபுட்டாளே... உச்ச கவர்ச்சியில் முன்னழகு.. பின்னழகை.. காட்டி ரணகளம் செய்யும் யாஷிகா! ஹாட் போட்டோஸ்!

இதை தொடர்ந்து குணசேகரன்,  அப்பத்தா கண் முழித்ததும் பேச துவங்கியவர் இன்னும் நிறுத்தாமல் பேசி கொண்டே இருக்கிறார். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களை குறிவைத்து, "எல்லா பொம்பளைகளுமே கிருமினலா இருந்தா என்ன பண்றது...? எத்தனை கிரிமினல் கூடத்தான் வாழுறது ஒரு மனுஷன், 80 வயசு கிழவிக்கும் பயப்பட வேண்டி இருக்கு.... எட்டு வயசு தாராக்கும் பயப்பட வேண்டியிருக்கு என பேசிக்கொண்டே... எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டனும் என சொல்கிறார். எனவே இன்றைய தினம் என்ன நடக்குக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!