மறக்குமா நெஞ்சம் என்கிற பெயரில் நடத்தப்பட இருந்த இசை நிகழ்ச்சி மழையால் தடைபட்ட நிலையில் அதற்கான புது தேதியை ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார்.
கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் இந்த ஆண்டு பத்து தல, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களிலுமே பாடல்கள் வேறலெவலில் ஹிட் அடித்தன. இதையடுத்து அவர் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் உள்ளன. தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்தியில் மைதான், பிப்பா, சம்கிலா, காந்தி டாக்ஸ், ராஞ்சனா 2 ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். அதேபோல் தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி, தனுஷின் 50-வது படம், கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம் ஆகியவற்றிற்கு இசையமைக்கிறார். இதுதவிர தெலுங்கில் தனுஷ் - சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகும் படம், ராம்சரணின் 16-வது படம் ஆகியவற்றிற்கும் மலையாளத்தில் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் படத்திற்கும் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... என் தந்தையை வீரப்பன் கடத்துனப்போ... சூப்பர்ஸ்டார் செஞ்ச உதவி இருக்கே - ஷிவ ராஜ்குமார் எமோஷனல் பேச்சு
இவ்வளவு பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்தார். அந்த இசை நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை காண ஆவலோடு வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்த ஏ.ஆர்.ரகுமான், விரைவில் புது தேதியை அறிவிப்பதாக கூறி இருந்தார். அவர் சொன்னபடியே தற்போது சென்னை கான்சர்ட்டின் புது தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற செப்டம்பர் 10-ந் தேதி மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னை ஈசிஆரில் உள்ள ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் நடத்தப்படும் என அவர் கூறி இருக்கிறார். ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதே டிக்கெட் உடன் வந்து கண்டுகளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
Chennai! Thank you for being so kind and patient with us! The new date for our show is the 10th of September! Use the same tickets and join us for this very special evening! … pic.twitter.com/Mkn10TCkEZ
— A.R.Rahman (@arrahman)இதையும் படியுங்கள்... செல்வராகவன் இயக்கத்தில் தல அஜித், தனுஷ் காம்பினேஷன்.. வெறித்தனம் - பிரபல நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!