‘ஜென்டில்மேன்-2’ இசையமைப்பாளர் யார் ? சரியாக பதிலளித்த மூவருக்கு தங்க நாணயம் பரிசு!

Published : Aug 17, 2023, 11:38 PM IST
‘ஜென்டில்மேன்-2’ இசையமைப்பாளர் யார் ? சரியாக பதிலளித்த மூவருக்கு தங்க நாணயம் பரிசு!

சுருக்கம்

ஜெண்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் சார்பில் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-ll’.   

இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.  எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். கலை தோட்டா தரணி. ஒளிப்பதிவு அஜயன் வின்சென்ட். 

‘ஜென்டில்மேன் 2’ படம் அறிவிக்கப்பட்டதும் அதில் பங்குபெறும் முதல் தொழில்நுட்ப கலைஞராக அறிவிக்கப்பட்டது இசையமைப்பாளர் பற்றித்தான். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ளார் என்றும் அவர் யார் என சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களில் மூன்று பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என்கிற போட்டியும் அறிவிக்கப்பட்டது.

சாச்சிபுட்டாளே... உச்ச கவர்ச்சியில் முன்னழகு.. பின்னழகை.. காட்டி ரணகளம் செய்யும் யாஷிகா! ஹாட் போட்டோஸ்!

இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர் இந்த போட்டியில் கலந்துகொண்டு தங்கள் யூகங்களை வெளிப்படுத்தினார்கள். அதில் நூற்றுக்கணக்கானோர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் பெயரை குறிப்பிட்டிருந்தார்கள். அப்படி சரியாக பதில் சொன்ன நபர்களில் முதல் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஈரோடு, பெங்களூர், ஹைதராபாத் என மூன்று மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் ஜாவித், மவுலி, சரத் ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்து தங்க நாணய பரிசை வென்றுள்ளார்கள். 

பேர்.. புகழுக்கு அடுத்தவர்கள் வாய்ப்பில் மண்ணை போடும் அதிதி ஷங்கர்! மன உளைச்சலில் கதறி அழும் பாடகியால் சர்ச்சை

சொன்னதை செய்வோம்.. செய்வதைத்தான் சொல்வோம் என்கிற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இவர்கள் மூவருக்கும் தங்க நாணயம் பரிசளித்து கவுரவப்படுத்த உள்ளார். வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இந்தப்படத்தின் துவக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் பிரம்மாண்டாமாக நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் கைகளால் இவர்கள் மூவருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது பற்றிய தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?
மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்