
சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கியது ரஜினிகாந்த் இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்க காரணம் அவரது கடுமையான உழைப்பு என்றால் மிகையாகாது. குணச்சித்திர நடிகர், வில்லன், ஹீரோ என படிப்படியாக உயர்ந்து இப்போது அனைவரும் அன்னார்ந்து பார்க்கும் உச்சத்தை எட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார். திரைத்துறையில் சாதித்த ரஜினிகாந்த் அரசியலிலும் கால் வைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திரைத்துறையினர் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு செம்ம பர்த்டே ட்ரீட்... ரஜினி - சிம்ரன் ரொமான்ஸ் வீடியோ... வைரலாகும் "பேட்ட" டெலிடேட் சீன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார். பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பூ, பரோட்டா சூரி, சதீஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்க உள்ள இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனிடையே சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டு தூள் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஹாப்பி பர்த்டே தலைவா... சூப்பர் ஸ்டாருக்காக ராகவா லாரன்ஸ் செய்த காரியம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ...!
ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களின் காட்சி மற்றும் வசனங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அதில் பேட்ட பட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது "சூப்பர் ஸ்டார்னா ரஜினி சார் மட்டும் தான். இனி யாரும் வரப்போறதும் இல்ல, பொறக்கப் போறதும் இல்ல" என்று சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் புகழாரம் சூட்டிய காட்சி இடம் பெற்றுள்ளது. சாதாரண படத்தை கூட பட்டி, தொட்டி எல்லாம் கொண்டு சேர்க்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது "தலைவர் 168" படத்தை தயாரித்து வருவதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.