
உளுந்தூர்பேட்டையில் இருந்து ஜப்பான் வரை வெற்றிக்கொடி நாட்டியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். "படையப்பா" படத்தில் ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனம் போல, ரஜினிகாந்திற்கு வயதானாலும் அழகும், ஸ்டைலும் சற்றும் குறையவில்லை. அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வருடா, வருடம் தலைவர் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி மகிழ்கின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்தும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் ரஜினி ரசிகர்கள் இலவச நலத்திட்டங்கள் வழங்கியும், ஆட்டம், பாட்டம் என்றும் பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. அதில் ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் பங்கேற்று வழிபாடு நடத்தினார். ஆண்டுதோறும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுப்புது விஷயங்களை செய்து வரும் ராகவா லாரன்ஸ், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் ஆயுள் மற்றும் உடல் நலத்திற்காக பூஜை செய்து வழிபாடு நடத்தினார். ராகவா லாரன்ஸ் கோ பூஜை செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு செம்ம பர்த்டே ட்ரீட்... ரஜினி - சிம்ரன் ரொமான்ஸ் வீடியோ... வைரலாகும் "பேட்ட" டெலிடேட் சீன்
அதற்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தி வீடியோ ஒன்றையும் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் ஹாப்பி பர்த்டே தலைவா, உங்களை வாழ்த்த வயதில்லை நீங்க நோய் நொடி இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என நான் வணங்குற, இல்ல நம்ம வணங்குற ராகவேந்திரா சாமியை வேண்டிக்கிறேன் அப்படின்னு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.