
"அபூர்வ ராகங்கள்" படத்தில் பார்த்த அதே ஸ்டைலும், வேகமும் சூப்பர் ஸ்டாரிடம் இன்றளவும் துளிகூட குறையவில்லை. இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த், இளம் நடிகர்களுக்கு உரிய அதே சுறுசுறுப்போடு "தர்பார்" பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு, சிறுத்தை சிவா இயக்கும் "தலைவர் 168" பட ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டார். வித்தியாசமான உடல் மொழி, துறுதுறு வேகம் என அன்று கே.பாலச்சந்தரை கவர்ந்த ரஜினிகாந்த், இன்றளவும் இளம் இயக்குநர்களையும் கவர்ந்திழுந்து வருகிறார். உச்ச நட்சத்திரமாக திரை வானில் மின்னும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைத்துறையினர் பல்வேறு வகையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக வெளிவந்த படம் "பேட்ட". நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் கம்பேக் கொடுத்த சிம்ரன், இந்த படத்தில் முதல் முறையாக ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், "பேட்ட" படத்தில் இருந்து நீக்கப்பட்ட ரஜினிகாந்த் - சிம்ரன் இடையேயான ரொமான்ஸ் வீடியோ ஒன்றை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. "பேட்ட" படத்தில் இடம் பெற்ற பாடல் போலவே அந்த காட்சியில் சூப்பர் ஸ்டாருக்கு இளமை திரும்பியுள்ளது.
"
தற்போது ரஜினிகாந்தின் "தலைவர் 168" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சிறுத்தை சிவா இயக்க உள்ள அந்தப் படத்தில், குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பரோட்டா சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக "பேட்ட" படத்தில் அவர் நடித்த மாஸ் காட்சிகளை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட 2 காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.