டிக்கெட் புக் பண்ணிட்டிங்களா ? எங்க காட்டுங்க..ரசிகர்களை குதூகலப்படுத்தும் பீஸ்ட் குழு..

Kanmani P   | Asianet News
Published : Apr 11, 2022, 05:01 PM IST
டிக்கெட் புக் பண்ணிட்டிங்களா ? எங்க காட்டுங்க..ரசிகர்களை குதூகலப்படுத்தும் பீஸ்ட் குழு..

சுருக்கம்

பீஸ்ட் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் புது சேலஞ்சு ஒன்றை அறிவித்துள்ளது.  

துவங்கியது பீஸ்ட் கொண்டாட்டம் :

கோலமாவு கோகிலா,டாக்டர் வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். மாஸ்டரை தொடர்ந்து விஜயின் நெக்ஸ்ட் மூவியான இதில் தெலுங்கு நாயகி  பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோரும் உள்ளனர். 

பிரமாண்ட தயாரிப்பு :

சுமார் 175 கோடியில் தயாராகியுள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் 100 கோடி ரூபாய் நடிகர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 
 

மேலும் செய்திகளுக்கு...பிரபு தேவா பட நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்..சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் எல்லை மீறியதாக கணவர் புகார்..

இரு பாடல் ப்ரோமோக்கள் : 

டாக்டர் பட பாணியில் உருவான இந்த படத்தின் பாடல் ப்ரோமோக்கள் ஹிட் அடித்தது. இதில் சிவகார்த்திகேயன், அனிரூத், நெல்சன்  கலகலப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இதையடுத்து  வெளியான அரபிக் குத்து மாஸ் ஹிட் கொடுத்தது. பின்னர் இரண்டாவது சிங்குளாக  ஜாலியோ ஜிம்கானா  
வெளியானது.

பாடலை தொடர்ந்து வெளியான ட்ரைலர் :

சமீபத்தில்  வெளியான  ட்ரைலரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.  அதன் படி  சோல்ஜராக வரும்  வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த மாலில் இருக்கிறார்.   கடத்தப்பட்ட மக்களை எவ்வாறு போராடி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகிறது. இதையடுத்து வெளியான மூன்றாவது சிங்குளாக  திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும் என்னும்பாடல் வெளியானது.  விவேக் எழுத இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து இந்த பாடலை பாடியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...அலப்பறையை ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்... ‘பீஸ்ட்’ சட்டையுடன் வலம் வரும் தளபதி Fans - இப்போ இதுதான் டிரெண்டிங்

டிக்கெட் முன்பதிவு சேலஞ் :

படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளும், டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த இந்த படங்களின் பட்டியலில் பீஸ்ட் முதல் வரிசையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக  முன்பதிவு செய்த டிக்கெட் போட்டோக்களை அப்லோட் செய்யும்படி சன் பிக்சர்ஸ் கேட்டுள்ளது. அதன்படி ரசிகர்கள் தங்களது டிக்கெட் கிளிக்குகளை ஷேர் செய்து வருகின்றனர்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!