
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மிகவும் ஸ்வாரஸ்யமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அணியினர் (NRI ) குடும்பம் என்றும்,மற்றொரு அணியினர் மதுரை குடும்பமாகவும் நடித்து வருகின்றனர். இதில் NRI குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதனை மதுரை குடும்பத்தினர் செய்யவேண்டும், மேலும் அனைத்து வேலைகளையும் மதுரை குடும்பத்தினர் தான் செய்யவேண்டும் என்பது விதி.
இந்நிலையில் NRI குடும்பத்தை சேர்ந்த ஆர்த்தி, மதுரை குடும்பத்தை சேர்ந்த நடிகை சுஜா வருணியிடம் உங்களுக்கு இங்கு இருப்பவர்களில் யாரை பிடிக்காதோ, அவர்களை கட்டிப்பிடித்து உன்னை எனக்கு பிடிக்காது என கூறவேண்டும் என கூறுகிறார்.
உடனே சுஜா... ஜூலியிடம் வந்து அவரை கட்டிப்பிடித்து தனக்கு இங்கு இருப்பவர்களில் ஜூலியை தான் சுத்தமாக பிடிக்காது என கேவலப்படுத்துவது போல் கூறுகிறார். மேலும் இது வரை நான் பார்த்ததில் நீங்கள் அப்படி தான் நடந்துக்கொண்டீர்கள். இனிமேல் தான் உங்களிடம் பேசி உங்களை பற்றி புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜூலி நான் உங்களிடம் நிறைய பேச வேண்டும் என்றும் சுஜா கூறினார்.
இதற்கு ஜூலி கீழே விழுந்தும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்கிற தோணியில் சிரித்துக்கொண்டு நான் ஒன்னும் நினைக்கல நாம நிறைய பேசலாம் என கூறி அனைத்து பற்களும் தெரியும் படி சிரித்து சமாளித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.