
நேற்றைய முன் தினம் முழுவதும், NRI குடும்பத்தினர் சொல்லுவதை மதுரை குடும்பத்தினர் கேட்டு அதன் படி நடந்துக்கொண்டனர். ஆனால் நேற்று பிக் பாஸ் NRI குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட உரிமையை பெற்றுக்கொண்டு அதனை மதுரை குடும்பத்திற்கு வழங்கியுள்ளது.
மேலும் என்ன என்ன வேலைகள் வாங்க வேண்டும் என சில விதிமுறைகளும் மதுரைக்குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இதில் மதுரை குடும்பத்தினர் தண்ணீர் கேட்டால் சொம்பில் தான் கொடுக்க வேண்டும், மதுரை குடும்பத்தினர் யாரவது வெயிலில் நடந்தால் NRI குடும்பத்தை சேர்த்தவர் அவருக்கு குடை பிடித்து விசிறி விட வேண்டும், மசாஜ் செய்து விட வேண்டும். வேர்க்கடலையை உரித்து ஊட்டி விட வேண்டும், மற்றும் மதுரை குடும்பத்தினர் அனுமதித்தால் தான் NRI குடும்பத்தினர் மற்ற இடத்தை பயன்படுத்த முடியும் என பல விதிமுறைகள் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை குடும்பத்தை சேர்ந்த சுஜாவிற்கு ஆரவ் வேர்க்கடலையை உரித்து ஊட்டி விடுகிறார். இதை பார்த்து ஆர்த்தி ஓ இதை தான் கடலை போடுவது என்பதா என கூறி பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரவ் சுஜாவிற்கு கடலை போடுகிறார் என சிரித்துக்கொண்டே கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.