பக்கத்துக்கு வீட்டு பெண்ணை கடித்து குதறிய தேனடை மதுமிதா...

 
Published : Aug 31, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
பக்கத்துக்கு வீட்டு பெண்ணை கடித்து குதறிய தேனடை மதுமிதா...

சுருக்கம்

comedy actress mathumitha bite nehibour

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் 'அட தேனடை'  என்ற காமெடியில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகை மதுமிதா. இவர் பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

தற்போது இவர், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வருகிறார்.  இவருக்கும் இவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்கிற பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் உஷா, மதுமிதா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அறிந்ததும் மீண்டும் மதுமிதா உஷாவிடம் சண்டை போட்டுள்ளார். ஒரு நிலையில் இருவருக்கும் சண்டை முற்றி மதுமிதா உஷாவின் கையை கடித்து குதறினார். 

மேலும் தற்போது இருவரும் தனித்தனியே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதில் மதுமிதா மீது தான் அதிகம் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. இருதரப்பு புகாரையும் பெற்றுக்கொண்ட போலீசார் இரத்தரப்பினரிடையேயும் விசாரணை செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!