படிப்பறிவில்லாத ஆடம்பரமான முட்டாள் கமல்...வம்புக்கு இழுக்கும் சு.சாமி...

 
Published : Feb 22, 2017, 02:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
படிப்பறிவில்லாத ஆடம்பரமான முட்டாள் கமல்...வம்புக்கு இழுக்கும் சு.சாமி...

சுருக்கம்

நடிகர் கமலஹாசனுக்கு, அரசியல் தலைவர் சுப்ரமணிய சாமிக்கும்  ஜல்லிக்கட்டு போராடம் தொடங்கியது ஏற்பட்ட ட்விட்டர் போராட்டம் இன்னும் தொடர்கதையாக தொடர்கிறது.

ட்விட்டரில் அடிக்கடி கமலை வம்புக்கு இழுக்கும் சுப்ரமணிய சுவாமிக்கு - காரஞ்சாரமாக கமழும் பதில் கொடுத்து வருவது அனைவரும் அறிந்தது தான்.

சமீபத்தில் கமல்ஹாசனை சுப்பிரமணியன் சுவாமி முதுகெலும்பில்லாத முட்டாள் என்று விமர்சனம் செய்ய அதற்கு கமல்ஹாசன், ' நான் முரட்டுத்தனமாக பதில் அளிக்க மாட்டேன். என்னை விட அவருக்கு அரசியல் அனுபவம் அதிகம்.

எனக்கு சாப்பாட்டில் எலும்பு இருக்கனும், ஆனால் உங்களுக்கு இல்லாமல் இருந்தால் தான் பிடிக்கும் நன்றாக சாப்பிடுங்கள்' என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசனை வம்புக்கு இழுக்கும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் 'கமல்ஹாசன் ஒரு பகட்டான முட்டாள்.

ஏனெனில் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என கூறிய கமல் நான் தமிழர்கள் அனைவரையும் பொறுக்கி என கூறியதாக வேண்டுமென்றே திரித்து கூறுகிறார் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி டுவிட்டர் பயனாளி ஒருவரின் கேள்விக்கு பதில் கூறிய சுவாமி, 'கமல்ஹாசன் படிப்பறிவில்லாத ஆடம்பரமான முட்டாள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த விமர்சனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி