
பிரபல நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடைபெற்றது, விரைவில் இவர்களது திருமணமும் நடைபெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் ஏற்கனவே நாகசைதன்யாவின் சகோதரர் அகிலுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
சமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கு முன்னரே இவர்களது திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு அழைப்பிதழ் விநியோகமும் முடிந்துவிட்ட நிலையில்.... ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அது திருமண வீட்டார் இருவரும் திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றூ அவசர தகவல் அனுப்பிவருவதாகவும், கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பதால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதா? அல்லது ஒத்தி வைக்கப்பட்டதா? என்பது குறித்த குழப்பம் நிலவுகிறது.
மேலும் தீடிர் என நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்டதை அறிந்த சமந்தா அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.