நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், வாரிசு படத்திற்கு அதிக அளவிலான திரையரங்கம் ஒதுக்க வேண்டும் என உதயநிதியிடம் வலியுறுத்த இருப்பதாக வாரிசு பட தயாரிப்பார் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
வாரிசு- துணிவு மோதல்
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தாயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு, இதே போல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துணிவு இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்கில் வெளியிடப்படுகிறது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்கில் மோதவுள்ளது. இதனை தற்போதே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.
'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் எங்கு? எப்போது நடைபெறுகிறது..! பரபரக்கும் ஏற்பாடுகள்.. வெளியான தகவல்!
ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
வாரிசு படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே, தீ போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதே போல அஜித்தின் துணிவு படத்தில் இருந்து வெளியான சில்லா பாடலையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சம அளவில் திரையரங்கம் ஒதுக்கீடு
இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகுவதால் எந்த திரைப்படத்தில் திரையரங்கம் அதிகளவில் ஒதுக்கப்படும் என கேள்வி எழுந்தது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்படங்களை வெளியிடுவதில் முன்னனியாக உள்ளது. எனவே துணிவு வெளியிடும் உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் அதிக திரையரங்கை கைப்பற்றக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் இரண்டு படத்திற்கும் 50:50 என்கிற முறையில் திரையரங்கம் ஒதுக்கப்படும் என உதயநிதி தெரிவித்து இருந்தார்.
வாரிசுக்கு அதிக திரையரங்கம்
ஆனால் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் , அவருக்கு தான் அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு சம அளவில் திரையரங்கம் பிரித்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே உதயநிதியை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்கம் ஒதுக்கும் படி கேட்க இருப்பதாக தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
25 ஆண்டுகளுக்கு பின் அதே நாள்... 'இந்தியன் 2' கெட்டப்பில் கமல் பகிர்ந்த அரிய புகைப்படம் வைரல்!