
90களில் பிறந்த அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நகைச்சுவை பேச்சாளர் தான் மதுரை முத்து. கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "அசத்தப் போவது யாரு" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தனது நகைச்சுவை பேச்சால் மிகவும் பிரபலமான ஒரு மேடைப் பேச்சாளர் அவர்.
மதுரை முத்து அவருடைய டைமிங் காமெடியும் அவரிடம் உள்ள தமிழ் ஆர்வமும் மக்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் சிறந்த நகைச்சுவை கலைஞராக பயணித்து வரும் மதுரை முத்து இப்பொழுது பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று அசத்தி வருகின்றார்.
இந்நிலையில் மதுரை முத்து அவர்களுடைய மனைவி லேகா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்து நேற்று ஜனவரி 4ம் தேதியோடு 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய நினைவஞ்சலி போஸ்டர் பகிர்ந்துள்ளார்.
மதுரையை அடுத்துள்ள திருமங்கலம் டி அரசபட்டியை சேர்ந்தவர் மதுரை முத்து என்பது குறிப்பிடத்தக்கது. பல மேடைகளில் கலக்கியுள்ள மதுரை முத்து தனது மனைவியின் இறப்பு குறித்து மிகவும் நெகழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.