கையில் விஜயகாந்த்.. பச்சை குத்திக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த்; என்ன சொன்னார் பாருங்கள்!!

Ansgar R |  
Published : Feb 05, 2024, 10:11 AM IST
கையில் விஜயகாந்த்.. பச்சை குத்திக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த்; என்ன சொன்னார் பாருங்கள்!!

சுருக்கம்

Premalatha Vijayakanth : பிரபல நடிகரும், தேமுதிக கட்சியின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் அவர்களுடைய மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது என்றால் அது மிகையல்ல.

தமிழகத்தின் சினிமா வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் எந்த காலகட்டத்திலும் மறக்கவே முடியாத ஒரு ஆளுமையாக வாழ்ந்து சென்றுருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் என்றால் அது மிகையல்ல. மதுரையில் பிறந்த விஜயகாந்த், கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான "இனிக்கும் இளமை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

துவக்கத்தில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த விஜயகாந்த், 1980ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஒரு மிகச்சிறந்த ஆக்சன் ஹீரோவாக தன்னைத்தானே உயர்த்திக்கொண்டார். இந்த சூழ்நிலையில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான "கேப்டன் பிரபாகரன்" என்கின்ற தனது நூறாவது திரைப்படத்தின் மூலம் கேப்டன் என்கின்ற அடைமொழி இவரை வந்து சேர்ந்தது.

மீண்டும் இயக்குனர் அவதாரம்.. பழைய வெற்றிப்படத்தை தூசுத்தட்டும் சிம்பு? - STR 50 அந்த படத்தின் இரண்டாம் பாகமா? 

வாழும் கர்ணனாக, அன்னதானபிரபுவாக வாழ்ந்து வந்த விஜயகாந்த் அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிமோனியா தொற்று காரணமாக காலமானார். அவருடைய மறைவு தமிழகத்தையே உலுக்கியது என்றால் அது மிகையல்ல.

இவருடைய இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உள்ளிட்ட மாபெரும் நடிகர்கள் கண்கலங்கி நின்றது அவருடைய புகழின் உச்சத்தை காட்டுவதாக அமைந்தது. இந்நிலையில் அவர் நடத்தி வந்த தேமுதிக கட்சியின் புதிய தலைவராக விஜயகாந்த் அவர்களுடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். 

கடந்து சில நாட்களாக பல பிரபலங்கள் அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் தற்போது உணர்ச்சி பூர்வமான ஒரு விஷயத்தை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செய்திருக்கிறார். இது குறித்த காணொளி ஒன்றை அவரது மகன் விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ஒரு பிரபல நிறுவனத்தோடு இணைந்து கேப்டன் விஜயகாந்த் அவருடைய திரு உருவத்தை தனது கையில் பச்சை குத்தி கொண்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். தற்போது இந்த காணொளி வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

நடிகனாக அல்ல... தமிழக வெற்றி கழகத்தின் தலைவனாக வந்து ரசிகர்களை சந்தித்த விஜய் - வைரலாகும் வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?
அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ