நானும் ரஜினியும் ஒரு படத்தில் கைகோர்த்தால்? ராஜமௌலி தரும் ஷாக்

 
Published : May 03, 2017, 06:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
நானும் ரஜினியும் ஒரு படத்தில் கைகோர்த்தால்? ராஜமௌலி தரும் ஷாக்

சுருக்கம்

SS Rajamouli Say I will join hand with Superstar Rajinikanth

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து கொண்டே போகிறார் என்று தான் சொல்லணும் இன்னும் பாகுபலி அதிர்ச்சியில் இருந்து மீளவே பல நாட்கள் ஆகும் சூழலில் மேலும் ஒரு அதிர்ச்சி தருகிறார்.

இந்திய சினிமா வரலாற்றிலே இது வரை யாரும் செய்யமுடியாத சாதனை செய்த ராஜமௌலி அடுத்த சாதனைக்கு தயாரகிராறம். ஆமாங்க அடுத்து சூப்பர்ஸ்டாரை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த 'பாகுபலி2' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 4 நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.

இந்தியாவில் இதுவரை ரூ.490 கோடியும், வெளிநாடுகளில் ரூ.135 கோடியும் வசூலித்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து இருக்கிறது. 

இந்தியில் அதிக வசூல் படங்களின் சாதனை பட்டியலில் இருந்த அமீரின் 'தங்கல்,' சல்லுவின் 'சுல்தான்' ஆகிய இரண்டு படங்களின் வசூல் சாதனைகளையும் 'பாகுபலி-2' முறியடித்து உள்ளதாக இந்தி டைரக்டர் கரண் ஜோகர் தெரிவித்து உள்ளார்.

பாகுபலி2 படத்துக்கு இயக்குனர் ராஜமவுலி ரூ.100 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய மொழி டைரக்டர்கள் யாரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ரஜினிகாந்தை வைத்து ராஜமவுலி அடுத்த படத்தை இயக்குவது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே 'பாகுபலி' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது, "ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ஆர்வமாக இருக்கிறேன். 

நான் தமிழில் நேரடியாக படம் இயக்கினால் அது ரஜினிகாந்த் படமாகத்தான் இருக்கும். அவருடன் பணிபுரிய வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை" என்று குறிப்பிட்டார். இருவரும் இணைந்தால் அந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சரித்திர சாதனை நிகழ்த்தும் படமாக இருக்கும் என்று பட உலகினர் கூறுகிறார்கள்.

ரஜினிகாந்தும் ‘பாகுபலி-2’ இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள படம் என்று டுவிட்டரில் பாராட்டி உள்ளார். எனவே இருவரும் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இதுகுறித்து கூறும்போது, "ரஜினிகாந்தும் ராஜமவுலியும் ஒரு படத்தில் இணைந்தால், அந்த படத்தின் வசூல், உலக அளவில் முதல் இடத்தில் இருக்கின்ற ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' படத்தின் சாதனையை பின்னுக்கு தள்ளிவிடும்" என்று தெரிவித்து உள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!