
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஒருமனதாக மக்களாலும் அணைத்து அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போதைய முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் வலியுறுத்துதலின் பேரில் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளார் என்று தகவல்கள் வந்தது.
இதுகுறித்து தான் நடிகை ஸ்ரீ பிரியா தனது ட்வுட்டரில் ஜீரணமாக வில்லையே, கடுமையான ஜீரணகோளாறு பிரச்சனை என பதிவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஸ்ரீ பிரியா ஜல்லிக்கட்டு திரும்பவும் நடத்தப்படும் புகழ் அனைத்தும் தமிழக இலைகர்களுக்கு மட்டுமே சேரும் என்றும், இதில் சித்தப்பா, சின்னமா என பலரும் உரிமை கொண்டாடுவது கண்டிக்க தக்கது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.