"அவருடன் நடிக்க 25 வருடங்கள் காத்திருந்தேன்".... சூப்பர் ஸ்டார் பற்றி மனம் திறந்த தளபதி நண்பர்....!

Published : Nov 11, 2019, 03:37 PM IST
"அவருடன் நடிக்க 25 வருடங்கள் காத்திருந்தேன்".... சூப்பர் ஸ்டார் பற்றி மனம் திறந்த தளபதி நண்பர்....!

சுருக்கம்

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீமன் தனது டுவிட்டர் பக்கத்தில் மனமுருகி பதிவிட்டுள்ளார்.

தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த பிகில் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போதைய படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக களம் இறங்குகிறார். மேலும் ஆண்ட்ரியா, கெளரி கிருஷ்ணன், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடித்து வரும் விஜய்யின் நண்பர் ஸ்ரீமன், அவர் கொடுத்த உற்சாகத்தால் 'தளபதி 64' படத்தில் மிகுந்த உற்சாகமாக நடித்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீமன் தனது டுவிட்டர் பக்கத்தில் மனமுருகி பதிவிட்டுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த மற்றும் இயக்குநர் முருகதாஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீமன், சூப்பர் ஸ்டாருடன் பணியாற்ற வேண்டும் என்பது அனைத்து நடிகர்களின் கனவு. அந்த கனவை நனவாக்குவதற்காக 25 வருடங்கள் காத்திருந்தேன். அது தர்பார் படம் மூலம் நிறைவேறியுள்ளது. இயக்குநர் முருகதாஸ் சாருக்கு நன்றி. உங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். சூப்பர் ஸ்டாருடன் நடித்ததை திரையில் காண ஆவலுடன் இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!