சூப்பர் சிங்கர் சீஸன் 7...முதல் பரிசு 50 லட்சத்தை தட்டித் தூக்கிய மூக்குத்தி முருகன்...

Published : Nov 11, 2019, 02:31 PM IST
சூப்பர் சிங்கர் சீஸன் 7...முதல் பரிசு 50 லட்சத்தை தட்டித் தூக்கிய மூக்குத்தி முருகன்...

சுருக்கம்

விக்ரம், புண்யா, முருகன், சாம் விஷால் மற்றும் கெளதம் ஆகிய 5 பேரும் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மேனன் ஆகிய நால்வரும் நடுவர்களாக இருந்து நடத்திய இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில், மேலும் சில சிறப்பு நடுவர்கள் பங்கேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே தனது வித்தியாசமான பாடல் தேர்வுகளால், பல குரல்களில் அநாயசமாகப் பாடும் சாமர்த்தியத்தால் தொடர்ந்து நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்து வந்த மூக்குத்தி முருகன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வென்று 50 லட்சம் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த நிகழ்ச்சி, சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஜூனியர் பிரிவில் அடங்குவர். இந்த நிகழ்ச்சியின் சீனியர் பிரிவின் 7-வது சீஸன் இறுதிப்போட்டி, கோவையில் உள்ள கொடீசியா அரங்கில் நேற்று (நவம்பர் 10) நேற்று நடைபெற்றது. விக்ரம், புண்யா, முருகன், சாம் விஷால் மற்றும் கெளதம் ஆகிய 5 பேரும் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மேனன் ஆகிய நால்வரும் நடுவர்களாக இருந்து நடத்திய இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில், மேலும் சில சிறப்பு நடுவர்கள் பங்கேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

இரண்டு சுற்றுகளிலும் போட்டியாளர்கள் பாடிய பாடல்களுக்குத் தரப்பட்ட நடுவர்களின் மதிப்பெண்கள் மற்றும் பார்வையாளர்கள் அளித்த வாக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்படி, மூக்குத்தி முருகன் என்று அழைக்கப்படும் முருகன், முதல் பரிசைப் பெற்றார். அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கூறியபடி அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு, விக்ரமுக்கு அளிக்கப்பட்டது. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் இவருக்குப் பரிசாக வழங்கப்படும்.

மூன்றாம் பரிசு, சாம் விஷால் மற்றும் புண்யா இருவருக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் இவர்களுக்குப் பரிசாக வழங்கப்படும். மேலும், இவர்கள் இருவருக்கும் தன் இசையில் பாட வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார் அனிருத். இப்போட்டியில் முதல் பரிசு வென்ற மூக்குத்தி முருகனுக்கு வேறு சில இசையமைப்பாளர்களிடமிருந்தும் பாடுவதற்கு அழைப்பு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?