
ரஜினி,அஜீத்,விஜய் என்று டாப் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு வந்த நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருப்பது கோடம்பாக்கத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவர் அப்படத்துக்கு கேட்டிருக்கும் சம்பளம் மற்ற நடிகைகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
‘எல்.கே.ஜி’படத்துக்குக் கதை வசனம் எழுதி நடித்த வானொளி நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலாஜி அடுத்து ‘மூக்குத்தி அம்மன்’என்ற படத்தை என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் பாலாஜிக்கு ஜோடியா அல்லது தனி கேரக்டராக வருகிறாரா என்று தெரியாத நிலையில் தனது லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கணக்கில் கொள்ளாமல் நடிக்க சம்மதித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்குக் காரணம் பாலாஜி சொன்ன கதைதான் என்று துவக்கத்தில் கிளம்பிய செய்திகளை அவரது எதிர்க்கட்சி வட்டாரங்கள் மறுக்கின்றன. இன்றைக்கு தமிழ் சினிமாவில் கோடி கோடியாய்க் கொட்டி படங்களைத் தயாரிக்கத் துவங்கியிருக்கும் வேல்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாலாஜி கதை சொல்லப் போகும் முன்பே, நயன்தாரா மற்ற படங்களில் வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு தருவதாய் ஆசை வார்த்தை காட்டப்பட்ட பிறகே கதை சொல்லச் சென்றாராம். நயன் உடனே ஓ.கே.சொன்னதற்குக் காரணம் அந்த சம்பளம் தான் என்கிறார்கள்.விஜய்யின் ‘பிகில்’ ரஜினியின் ‘தர்பார்’படங்களில் தலா 4 கோடி வாங்கிய நயன் மூக்குத்தி அம்மனுக்கு 8 கோடி சம்பளம் பெறுகிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.