
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஊதா கலரு ரிப்பன் பாடலும், பாவடை தாவணியில் இவர் காட்டிய ஸ்வீட் அண்ட் க்யூட் ரியாக்ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இளம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இதுவரை ஓவர் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது.
இதையும் படிங்க: அங்கமட்டும் வரமாட்டேன்... தொடர்ந்து அடம்பிடிக்கும் நயன்தாரா... "மூக்குத்தி அம்மன்" நியூ அப்டேட்...!
பாடல் காட்சிகளில் கூட கிளாமர் இல்லாமல் தான் நடிப்பார். புடவை, சுடிதார், பாவடை தாவணி என தமிழ் சினிமாவில் வலம் வரும் க்யூட் நடிகை ஸ்ரீதிவ்யா. ஆனால் இவரது தங்கை ஸ்ரீரம்யா ஓவர் கவர்ச்சி காட்டி நடித்த படத்தின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
2013ம் ஆண்டு வெளியான யமுனா என்ற படத்தில் ஸ்ரீரம்யா நடித்திருந்தார். அந்த படத்தில் ஹீரோவுடன் ஓவர் கிளாமரில் ஸ்ரீரம்யா நடித்துள்ள ரொமான்ஸ் காட்சிகளின் புகைப்படங்கள் திடீரென சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், துளிகூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்பவர் ஸ்ரீதிவ்யா அவருக்கு இப்படி ஒரு தங்கையா என நெட்டிசன்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.
இதையும் படிங்க: எக்கச்சக்க ஹாட்... ரசிகர்களுக்கு புதுவித பர்த்டே ட்ரீட் கொடுத்த இஷா குப்தா... சோசியல் மீடியாவில் வைரலாகும் சமாச்சாரம்...!
அக்காவுக்கு போட்டியாக சினிமாவில் ஒரு ரவுண்ட் வர ஆசைப்பட்டு, இப்படி ஓவர் கிளாமர் காட்டி நடிச்ச ஸ்ரீரம்யாவை சிலர் விமர்சித்துள்ளனர். ஆனால் கவர்ச்சியை அள்ளித் தொளித்துள்ள ஸ்ரீரம்யாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஸ்ரீதிவ்யா தங்கச்சியா இது என வாய்பிளந்தபடியே போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.