ட்விட்டர் கணக்கு ஹேக்...ஸ்ரீதேவியின் கணவர் போலீசில் புகார்...

 
Published : Mar 11, 2017, 02:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
ட்விட்டர் கணக்கு ஹேக்...ஸ்ரீதேவியின் கணவர் போலீசில் புகார்...

சுருக்கம்

sridevi husband twitter is hacked

சமீப காலமாக பல நடிகைகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அதில்,போலித்தனமாக பல தகவல்களை பரப்பி வருகின்றனர் மர்ம மனிதர்கள்.

அதே போல் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு  ஹேக் செய்யப்பட்டு பல அதிர்ச்சி கொடுக்கும் வீடியோக்கள் மற்றும் செய்திகள் வெளியாகி கோலிவுட் திரையுலகத்தையே பரபரப்பாகியது.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகை மடோனா செபாஸ்டியன் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் வெளியிடப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என கூறினார்.

இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போனிகபூரின் டுவிட்டரை ஹேக் செய்த ஹேக்கர், லக்னோவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றின் நன்கொடைக்காக தனது கணக்கில் பணம் டெபாசிட் செய்யுங்கள் என ஒருசில திரையுலக பிரபலங்களை கேட்டுக்கொண்டதால் ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தற்போது போனிகபுர் வெளிநாட்டில் இருப்பதால் அவரது சார்பில் சுனில் கோத்ரா என்பவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!
கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது