மாஸ் காட்டிய Spider-Man No Way Home... 18 நாளில் எவ்வளவு வசூலை குவித்துள்ளது தெரியுமா?

By Kanmani PFirst Published Jan 4, 2022, 4:37 PM IST
Highlights

Spider-Man No Way Home படம் வெளியான 18 நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தங்களுக்கென ஒரு சூப்பர் பவர் இருந்தால் எப்படி இருக்கும்என்னும் எண்ணம் பலருக்கும் உண்டு. அவ்வாறு பலரின் ஆசையை கற்பனையாக உருவாக்கி உருவெடுத்துள்ள சூப்பர் ஹீரோக்களின் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தே வருகிறது. அந்த வகையில் சிலந்தி மேன் என்னும் ஸ்பைடர் மேன் கற்பனைக்கு மிஞ்சிய காட்சியாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது 'ஸ்பைடர்மேன்' பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன

கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கான தலைப்பில் பல குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து ஒரு வழியாக ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் என்னும் பெயரை படக்குழு அறிவித்தது. 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படம் வரும் டிசம்பர் 17 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திலிருந்து சமீபத்தில் வெளியான அதிரடி காட்சிகள் நிறைந்த தமிழ் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

இந்நிலையில் இந்த படம் கடந்த டிசம்பர் 16-ம் தேதியே தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.  இந்நிலையில் இப்படம் வெளியாகி 18 நாளில் இந்தியாவில் 260 கோடி ரூபாய் GROSS கலெக்சனாக வசூல் செய்துள்ளது. 202 கோடி ரூபாய் நெட் கலெக்சனாக கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் 10200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியான 18 நாட்களில் ஹாலிவுட்டின் 3வது பெரிய படமாக Spider Man மாறியுள்ளது.

click me!