SJ Surya next movie : மாஸ் அப்டேட்.. மீண்டும் வில்லன் ரோலில் எஸ்.ஜே சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?

Published : Jan 04, 2022, 04:17 PM ISTUpdated : Jan 04, 2022, 04:41 PM IST
SJ Surya next movie : மாஸ் அப்டேட்.. மீண்டும் வில்லன் ரோலில் எஸ்.ஜே சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?

சுருக்கம்

SJ Surya next movie : மாநாடு படத்தை தொடர்ந்து  விஷாலின் 33 வது படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஷி, வாலி, போன்ற சிறந்த படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்து காட்டிய எஸ்.ஜே.சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் நிரூபித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல படங்களின் வாய்ப்பு தேடி வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இவர் விஜய்க்கு வில்லனாக 'மெர்சல்' படத்தில் நடித்து மிரட்டிய காட்சிகள் ரசிகர்களிடம் அதிகம் ரசிக்கப்பட்டது. அதே போல், மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'ஸ்பைடர்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெறித்தனமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா  போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்ளை பெரிதும் கவர்ந்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் நடிகர் விஷாலின் 33வது திரைப்படத்திற்கு மார்க் அன்டனி என்று பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!